Connect with us

அம்மாவுக்கு வந்த விபரீத ஆசை.. ஆடிப்போன முதலமைச்சர்.. பேட்டியில் கூறிய உதயநிதி!.

udhayanithi

News

அம்மாவுக்கு வந்த விபரீத ஆசை.. ஆடிப்போன முதலமைச்சர்.. பேட்டியில் கூறிய உதயநிதி!.

Social Media Bar

தமிழ் சினிமாவில் பல முக்கிய நடிகர்களும் அரசியலில் களம் கண்டு வரும் வேளையில், அரசியல் மற்றும் சினிமாவை பின்புலமாகக் கொண்ட குடும்பத்திலிருந்து வந்தவர் நடிகர் மற்றும் தற்போது அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின்.

இவர் அரசியலில் பணிகளை செய்து வருவதால் தற்பொழுது சினிமாவில் நடிப்பதை குறைத்துள்ளார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் குடும்பத்துடன் ஒரு படத்தை பார்த்துவிட்டு நடந்த சம்பவத்தை பற்றி தெரிவித்திருப்பது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் உதயநிதி

இவர் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகராவார். தற்பொழுது அரசியலிலும் தனது பயணத்தை தொடங்கி இருக்கிறார். இந்நிலையில் தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் இருக்கிறார்.

விஜய், திரிஷா நடித்த குருவி என்னும் திரைப்படம் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பில் வெளிவந்த முதல் திரைப்படம் ஆகும்.

udhayanidhi

அதன் பிறகு ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் ரசிகர்களின் மத்தியில் நடிகராக வரவேற்பு பெற்றார். அதன் பிறகு இது கதிர்வேலன் காதல், நண்பேண்டா, கெத்து, மனிதன், சரவணன் இருக்க பயமேன்,நெஞ்சுக்கு நீதி, மாமன்னன் போன்ற படங்களில் நடித்து நடிகராக மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றிருக்கும் உதயநிதி, சமீபத்தில் தன் குடும்பத்துடன் பார்த்த திரைப்படத்தைப் பற்றி பகிர்ந்து இருக்கிறார்.

லவ் டுடே திரைப்படம்

கடந்த 2022 ஆம் ஆண்டு பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த திரைப்படம் லவ் டுடே. இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. உதயநிதி பேசும் போது, என் அப்பா இப்பொழுது என்ன படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது என கேட்டார். நான் லவ் டுடே திரைப்படம் வெளியாகி நல்ல ஹிட் கொடுத்திருக்கிறது என கூறினேன். அவரை பார்க்கவும் சொன்னேன்.

love today

ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. இந்த திரைப்படம் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா என நினைத்தேன். காரணம் இந்த திரைப்படத்தில் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைக்கலங்களை பற்றி கூறியிருப்பார்கள். இது எல்லாம் இவர்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியுமா என்று தெரியாமல், நான் படம் பார்க்க சொன்னேன். நாங்கள் அனைவரும் படத்தை பார்த்தோம். படம் பார்த்த பிறகு படம் நன்றாக இருக்கிறது என எங்க அப்பா கூறினார். உடனே என்னுடைய அம்மா அப்படியானால் நாம் நம்முடைய மொபைலை மாற்றிக் கொள்ளலாமா என கேட்டார்.

நானும் எங்க அப்பாவும் அய்யய்யோ வேண்டாம் என கூறினோம். எல்லாரும் பேசிக் கொண்டிருக்கும் போது நான், என் மனைவி, எங்க அப்பா, என் தங்கை அனைவரும் இருந்தோம். என்னுடைய அம்மா படம் நல்லா இருக்கு இல்லையா எல்லாரும் ஃபோன்களை மாற்றிக் கொள்ளலாம் என கூறி காலாய்த்தார் என அவர் பேசிய பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.

To Top