Latest News
அம்பயர் வேஷத்தில் வந்த மும்பை இந்தியன் வீரர்கள்!.. ஆடிப்போன கிரிக்கெட் ரசிகர்கள்!.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!..
உலக அளவில் கிரிக்கெட் உலக கோப்பை பிரபலமாக இருந்தாலும் கூட இந்தியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக ஐ.பி.எல் உள்ளது. தற்சமயம் ஐபிஎல் போட்டிகள் துவங்கி இனிதே நடந்து வருகின்றன.
இதன் 25 ஆவது போட்டியானது நேற்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில் மும்பை இந்தியஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய இரு அணிகளுக்கு இடையே போட்டி நடந்தது.
இரண்டு அணியினருமே சமமான வெற்றியில் இருந்ததால் இருவருக்குமே இது முக்கிய மேட்ச் ஆக இருந்தது. இந்த நிலையில் டாஸ் வின் செய்த ஹர்திக் பாண்டியா பௌலிங்கை தேர்ந்தெடுத்தார். அதன்படி பேட்டிங்கை தேர்ந்தெடுத்த ஆர்.சி.பி துவக்கத்தில் சிறப்பாக விளையாடினாலும் போக போக விளையாட்டில் தொய்வு தெரிந்தது.
இந்த நிலையில் 196 ரன்களை அடித்தது ஆர்.சி.பி. இந்த போட்டி துவங்கியது முதலே அம்பயர்களின் முடிவுகள் மும்பை அணிக்கு சாதகமாகவே இருந்தன. நேற்று நடுவர்களாக இருந்த நிதின் மேனன், வினீத் குல்கர்னி மற்றும் விரேந்தர் சர்மா மூவருமே ஆர்.சி.பிக்கு எதிராக செயல்ப்பட்டதாக ரசிகர்கள் குற்றம் சாட்டினர்.
ரஜத் பட்டிதர் அடித்த பவுண்ட்ரியை ஃபோர் லைனில் சென்று தடுக்க முயன்றார் மும்பை அணியை சேர்ந்த ஆகாஷ் மத்வால். பொதுவாக பவுண்டரியில் பந்தை தடுக்கும்போது தடுப்பவரின் உடல் பகுதி எதுவும் பவுண்டரியை உரசி இருக்க கூடாது.
அப்படி உரசியிருந்தால் அது பவுண்டரி எனதான் எடுத்துக்கொள்ளப்படும். ஆனால் மூன்றாம் நடுவரான நிதின் மேனன் அதை சரியாக சோதிக்காமல் அவசர அவசரமாக பவுண்டரி இல்லை என அறிவித்தார்.
அதே போல இரண்டு அப்பிள்கள் முடிந்த பிறகும் கூட இஷான் கிஷான் கேட்டுக்கொண்டதற்காக மூன்றாவதாக அவருக்கு அப்பிள் வழங்கியுள்ளார் அம்பயர். இப்படி ஒரு விதி கிரிக்கெட்டிலேயே கிடையாது. எனவே வெளிப்படையாகவே நடுவர்கள் மும்பை அணிக்காக வேலை பார்த்தது தெரிகிறது.
இதனால் கடுப்பான ரசிகர்கள் மும்பை அணியில் மட்டும் அம்பயருடன் சேர்த்து 14 ப்ளேயர்கள் இருக்கின்றனர். ப்ளேயர்கள் எல்லாம் அம்பயர் போல மாறுவேடத்தில் வந்துள்ளனர் என கிண்டல் செய்து வருகின்றனர்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்