Connect with us

கத்திக்குத்துக்கு உள்ளான தேவரா நடிகர்… வீடு புகுந்து நடந்த கொடூரம்.!

Tamil Cinema News

கத்திக்குத்துக்கு உள்ளான தேவரா நடிகர்… வீடு புகுந்து நடந்த கொடூரம்.!

Social Media Bar

பாலிவுட்டில் சில நடிகர்கள் வயதானாலும் கூட வாய்ப்புகள் குறையாமல் இருந்து வருகின்றனர். அப்படி பிரபலமாக இருக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சைஃப் அலிக்கான்.

தற்சமயம் சைஃப் அலிக்கானின் மகளான சாரா அலிக்கானே கதாநாயகியாக நடிக்க துவங்கிவிட்டார். ஆனாலும் கூட இன்னமும் சினிமாவில் வாய்ப்பு குறையாத நடிகராக சைஃப் அலிக்கான் இருந்து வருகிறார்.

பெரும்பாலும் இவர் நடிக்கும் திரைப்படங்கள் பாலிவுட்டில் பெரும் ஹிட் படங்களாகவே அமைந்து வருகின்றன. சமீபத்தில் கூட நடிகர் ஜுனியர் என்.டி.ஆர் நடித்து தெலுங்கில் வெளியான தேவரா திரைப்படத்தில் இவர்தான் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் இவர் அரச குலத்தை சேர்ந்தவர் ஆவார். இப்போதும் இவரது ஆட்சிக்கு கீழ் ஒரு கிராமம் இருந்து வருகிறது. அந்த அளவிற்கு புகழ் வாய்ந்த சைஃப் அலிக்கான் இன்று மர்ம நபர்களால் தாக்கப்பட்டுள்ளார்.

சைஃப் அலிக்கான் வீட்டுக்குள் ரகசியமாக புகுந்த நபர்கள் அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியுள்ளனர். இந்த நிலையில் உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இந்த நிலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ள லீலாவதி மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர் கூறும்போது அதிகாலை 3.30 மணியளவில் யாரோ ஒரு நபர் சைஃப் அலிக்கானை கத்தியால் குத்தியுள்ளனர் என விளக்கம் கொடுத்துள்ளார்.

இதற்கு காரணம் என்ன. சைஃப் அலிக்கானுக்கு ஏதாவது முன்பகை விரோதிகள் இருக்கிறார்களா? என்கிற ரீதியில் இந்த குற்றத்தை ஆய்வு செய்ய துவங்கியுள்ளது காவல் துறை.

Bigg Boss Update

To Top