Connect with us

யார் இந்த ஸ்ரீஜா.. சினிமாவில் வரிசையாக ஹிட் கொடுத்து காணாமல் போன நடிகை!. இப்போதைய நிலை என்ன?

sreeja

News

யார் இந்த ஸ்ரீஜா.. சினிமாவில் வரிசையாக ஹிட் கொடுத்து காணாமல் போன நடிகை!. இப்போதைய நிலை என்ன?

Social Media Bar

Actress Sreeja: ஒரு சில நடிகைகள் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அதன் பிறகு எங்கு சென்றார்கள் என்பது பெரிய கேள்விக்குறியாக இருக்கும். நடிகர்களுக்கு தற்போது இருக்கும் மார்க்கெட்டை விட நடிகைகளுக்கு திருமணத்திற்குப் பிறகு எந்த ஒரு படங்களிலும் நடிகையாக நடிக்க இயலாது.

ஆனால் பல நடிகைகள் திருமணத்திற்கு பிறகு சில கதாபாத்திரங்களில் நடித்து வருவார்கள். அந்த வகையில் 80ஸ் காலத்தில் அனைவருக்கும் ஃபேவராட்டாக இருந்த நடிகை ஸ்ரீஜா ஆனால் அவர் தற்போது எந்த ஒரு திரைப்படங்களிலும் நடிக்காத நிலையில் அவரை ரசிகர்கள் தேட தொடங்கி இருக்கிறார்கள்

நடிகை ஸ்ரீஜா

நடிகை ஸ்ரீஜா கேரளாவில் பூர்விகமாக கொண்டவர். இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். தமிழில் கமலஹாசன் நடித்த சாணக்கியன் என்ற திரைப்படத்தில் 1989 ஆம் ஆண்டு அறிமுகமானார். அதன் பிறகு மலையாளத்தில் ஜெயராமுக்கு சகோதரியாக நடித்தார்.

அன்னக்குட்டி கோடம்பாக்கம் விளக்குன்னு என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தமிழில் இவர் நடித்த சேரன் பாண்டியன் என்ற திரைப்படம் மிகவும் பிரபலமான திரைப்படம். இதன் மூலம் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.

srija

எம்ஜிஆர் நகரில், தையல்காரன், முதல் குரல், செவ்வந்தி போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார். கடந்த 1994 ஆம் ஆண்டு வெளிவந்த செவ்வந்தி திரைப்படத்தில் நடித்த கதாநாயகன் சந்தான பாண்டியனை காதலித்து 1993 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

சினிமாவை விட்டு விலகிய ஸ்ரீஜா

இவரின் குடும்பம் பொதுவாக கலை குடும்பமாகும். இவரின் பெற்றோர் நடனக் கலைஞர்கள் ஆவார்கள். இருந்த போதிலும் திருமணத்திற்குப் பிறகு இவர் சினிமாவை விட்டு விலகினார். இந்நிலையில், தற்போதும் செம்மீனே செம்மீனே என்ற பாடல் கேட்கும் போதெல்லாம் இவரது நினைவுகள் நம்மைச் சுற்றி வரும்.

இவர் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதற்கு விருப்பம் காட்ட வில்லை. 30 வருடங்களாக சென்னையில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் ஸ்ரீஜா தற்பொழுது அவரின் பேட்டிகளை பார்த்த ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இவரின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சேரன் பாண்டியன் படத்தில் நடித்த நடிகையா இவர் என்று ஆச்சரியப்படும் அளவிற்கு உள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Articles

parle g
madampatty rangaraj
To Top