Latest News
வடிவேலுவை வச்சி ஒரு ரத்தக்காட்டேரி படம்!.. 23ம் புலிகேசி இயக்குனரின் திட்டம்!.
Simbudevan: தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ அதேபோன்று காமெடி நடிகர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
சினிமாவில் காமெடி நடிகராக திரைப்பயணத்தை தொடங்கி, தற்பொழுது ஹீரோவாக பல படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்த ஒரு காமெடி நடிகர் என்றால் அது வடிவேலு தான். தற்பொழுது இவருடைய புகைப்படம் இல்லாமல் எந்த ஒரு மீம்ஸ்களும் இருப்பதில்லை.
இவரின் நடிப்பில் வெளியான இம்சை அரசன் 23ஆம் புலிகேசி திரைப்படத்தைப் பற்றி சிம்பு தேவன் கூறியிருப்பது தற்பொழுது வைரலாகி வருகிறது. அதனை பற்றி காண்போம்.
சிம்புதேவன்
சிம்புதேவன் திரைப்பட இயக்குனர் ஆவார். மேலும் வடிவேலை வைத்து கதாநாயகனாக இம்சை அரசன் 23ம் புலிகேசி என்ற திரைப்படத்தை இயக்கினார். அந்தப் படத்தின் மூலம் இவர் புகழ்பெற்றார்.
அதன் பிறகு அறையின் 305-ல் நான் கடவுள், இரும்புக்கோட்டை, முரட்டு சிங்கம், ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும், புலி, கசட தபற போன்ற பல படங்களை எழுதி இயக்கியிருக்கிறார்.
இந்நிலையில் இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி படத்தை எடுத்த பிறகு மீண்டும் வடிவேலை வைத்து ஒரு படம் எடுப்பதாக இருந்த தகவலை பற்றி தற்போது பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
மீண்டும் வடிவேலை வைத்து படம்
இம்சை அரசன் இரண்டாம் புலிகேசி படத்திற்குப் பிறகு இயக்குனர் சிம்புதேவன் இயக்குனர் சங்கர் தயாரிப்பில் வடிவேலு படம் நடிப்பதாக பேச்சுகள் அவ்வப்போது எழுந்து வந்தன. ஆனால் சில காரணங்களுக்காக இடையில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் வடிவேலு படங்களில் நடிக்காமல் இருந்தார். ஆனால் தற்பொழுது வடிவேலு படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இயக்குனர் சிம்புதேவன், வடிவேலுவை வைத்து மற்றொரு படம் இயக்க இருந்ததாக எழுந்த தகவல் பற்றி பேட்டி ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார். வடிவேலுவை வைத்து அடுத்ததாக படம் ஒன்று இயக்க இருந்ததாகவும், ஆனால் அதன் பிறகு நான் அறை எண் 305-ல் நான் கடவுள் என்னும் படத்தை இயக்கி விட்டேன்.
வடிவேலுக்கு எழுதப்பட்ட கதையை நான் சங்கர் சாரிடம் கொடுத்துவிட்டேன். ஆனால் படத்தின் கதையை சில காரணங்களால் முடிக்க முடியவில்லை என சிம்புதேவன் கூறியிருந்தார்.
அதன் பிறகு ஆறு ஆண்டுகள் கழித்து இப்படத்தை எடுக்கலாம் என நினைத்தபோது திரும்பும் திசை எல்லாம் பேய் படமாக எடுத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு வாரத்திற்கு இரண்டு, மூன்று பேய் படங்கள் வெளிவந்து கொண்டிருந்தது. எனவே அந்த படத்தை எடுக்க முடியாமல் சென்று விட்டது என சிம்புதேவன் கூறியிருக்கிறார்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்