Tamil Cinema News
மலையில் இருந்து வர்ற பொண்ணுக்கு அப்படிதான் இருக்கும்.! ரகசியத்தை கூறிய நடிகை.!
தமிழில் லெஜண்ட் திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை ஊர்வசி ரித்துலா. வெகு காலங்களாகவே இவர் தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என்று பல மொழிகளிலும் கதாநாயகியாக முயற்சி செய்து வருகிறார். லெஜண்ட் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் மக்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றார் ஊர்வசி ரித்துலா.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் நடித்த திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்து வருகிறது. தெலுங்கில் சமீபத்தில் தாக்கு மகாராஜ் என்கிற பாலகிருஷ்ணா திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் அதிக கவர்ச்சியாக நடித்திருந்தார் ஊர்வசி ரித்துலா.
இதனை தொடர்ந்து அவரது கவர்ச்சிக்காகவே அந்த திரைப்படம் வரவேற்பை பெற துவங்கியது, இதனை தொடர்ந்து ஊர்வசி ரித்துலாவிற்கு வாய்ப்புகளும் அதிகமாக வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் அவரை குறித்து சில விமர்சனங்களும் வந்த வண்ணம் உள்ளன.
ஊர்வசி ரித்துலா பார்ப்பதற்கு பாலகிருஷ்ணாவை விட பெரிதாக தெரிகிறார். அவரது உடலமைப்பு பெரிதாக உள்ளது. இதற்கு ஏதாவது சிகிச்சை செய்திருப்பார் என்கின்றனர் நெட்டிசன்கள். இந்த நிலையில் இதற்கு பதிலளித்த ஊர்வசி ரித்துலா நான் உத்திரகாண்டில் மலை மக்களை சேர்ந்த பெண். எனவே அப்படிதான் இருப்பேன்.
மற்றப்படி நான் எந்த சிகிச்சையும் செய்துக்கொள்ளவில்லை. என தெரிவித்துள்ளார் ஊர்வசி.
