எம்.ஜி.ஆர் இறப்புக்கு இதுதான் காரணம்.. வெளிப்படையாக கூறிய இயக்குனர்..!

தமிழில் நிறைய வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர்களில் வி சேகர் மிக முக்கியமானவர்.

தமிழில் தொடர்ந்து குடும்ப திரைப்படங்களில் குடும்ப கதை அமைப்புகளில் இருக்கும் பிரச்சினைகளை பேசும் படங்களை அவர் இயக்கி வந்தார். அந்த படங்களுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வந்தது.

மேலும் அரசியல் ரீதியாகவும் நிறைய விஷயங்களை திரைப்படங்களின் வழியாக கூறி இருக்கிறார் வி சேகர். இந்த நிலையில் சமீபத்தில் எம்.ஜி.ஆர் குறித்து தனது கருத்து ஒன்றை பேட்டியில் கூறி இருக்கிறார் வி சேகர்.

MGR

Social Media Bar

அதில் அவர் கூறும்பொழுது அரசியல் வாழ்க்கை என்பது எப்பொழுதும் மோசமான வாழ்க்கையாக தான் இருக்கும். எம் ஜி ஆரை பொறுத்தவரை அவர் சினிமாவில் இருந்த காலகட்டங்களில் மிக ஆரோக்கியமாக இருந்தார்.

எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருந்தார். ஆனால் அரசியலுக்கு சென்ற ஐந்து ஆறு வருடங்களிடையே அதிக மன கஷ்டத்திற்கு உள்ளானார் அதனால் அவரது உடல்நிலை மிகுந்த மிகவும் மோசமான நிலைக்கு சென்றது. எனவே அரசியல் என்பது ஒரு நல்ல விஷயம் கிடையாது என்று கூறியிருக்கிறார் வி சேகர்.