Cinema History
இந்த மாதிரி இயக்குனருக்கு எல்லாம் பாட்டு எழுத முடியாது!.. இயக்குனரால் கடுப்பான வாலி..
Vaali: ப்ளாக் அண்ட் ஒயிட் சினிமாவில் துவங்கி விஜய் அஜித் காலம் வரையிலும் சினிமாவில் தொடர்ந்து பாடல் வரிகளை எழுதி வந்தவர் கவிஞர் வாலி!. எம்.ஜி.ஆர் காலம் துவங்கி மங்காத்தா படம் காலக்கட்டம் வரையிலுமே தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவிஞர் வாலிக்கு முக்கியத்துவம் இருந்தது.
பொதுவாகவே தமிழின் மீது அதிக ஆர்வம் கொண்டவர் வாலி, கண்ணதாசனுக்கு பிறகு அவருக்கு இணையான ஒரு கவிஞராக வாலி இருந்தார். எந்த ஒரு இசைக்கும் அடுத்த 10 நிமிடத்தில் பாடல் வரிகளை எழுதி விடுவார் வாலி.
அப்படியாக மம்முட்டி நடிப்பில் உருவான அரசியல் என்கிற திரைப்படத்திற்கும் பாடல் வரிகளை வாலிதான் எழுதினார். அதில் ஒரு இசைக்கு வாசுகி வள்ளுவன் என்கிற பெயரை கொண்டு பாடல் வரிகளை எழுதியிருந்தார். தேவா அந்த பாடலுக்கு இசையமைத்திருந்தார்.

இந்த நிலையில் அந்த பாடலை கேட்ட படத்தின் இயக்குனர் ஆர்.கே செல்வமணி அந்த பாடலை கேட்கும்போது அவருக்கு ஒரு சந்தேகம் வந்துள்ளது. படத்தில் கதாநாயகன் பெயர் வள்ளுவனே கிடையாதே பிறகு ஏன் வரிகளில் அப்படி எழுதியுள்ளனர் என யோசித்தார்.
எனவே அதுக்குறித்து வாலியிடம் கேட்டுள்ளார். இதனால் கடுப்பான வாலி யாருய்யா இவன் வள்ளுவன், வாசுகி கூட தெரியாமல் இருக்கான் என கடுப்பாகி உள்ளார் வாலி.
