Cinema History
சாகப்போறதை முன்னாடியே கணித்தவர் கண்ணதாசன்!.. வாலி கூறிய விசித்திர நிகழ்வு!..
தமிழ் சினிமாவில் உள்ள பாடலாசிரியர்களுக்கு எல்லாம் குரு என கவிஞர் கண்ணதாசனை கூறலாம். தமிழ் சினிமாவில் கண்ணதாசன் பாடலாசிரியராக இருந்த காலகட்டத்தில் அவருக்கு நிகரான இன்னொரு பாடல் ஆசிரியர் இருக்கவில்லை.
அந்த அளவிற்கு சிறப்பான பாடல் வரிகளை கொடுத்தவர் கண்ணதாசன். கண்ணதாசன் பிரபலமாக இருந்த காலகட்டத்திலேயே வாலியும் திரைத்துறைக்கு பாடல் ஆசிரியராக அறிமுகமானார். வாலிக்கும் கண்ணதாசனுக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது.
ஒருமுறை கண்ணதாசன் வெளிநாட்டிற்கு கிளம்பிய பொழுது வாலியை அழைத்து ஒரு விஷயத்தை கூறியுள்ளார் ஒருவேளை நான் இறந்துவிட்டால் எனக்கு இரங்கல் பாடலை நீதான் பாட வேண்டும் என்று அவர் வாலியிடம் கூறியுள்ளார். எதற்கு இப்பொழுது இந்த விஷயங்களை எல்லாம் இவர் பேசுகிறார் என்று நினைத்த வாலி அதை சகஜமாக விட்டு விட்டார்.
ஆனால் வெளிநாடு சென்ற கண்ணதாசன் அங்கேயே காலமானார். அவர் இறந்த சில நாட்கள் கழித்து ஒரு அமைப்பு கண்ணதாசனுக்காக இரங்கல் நிகழ்வு நடத்தியது. அந்த நிகழ்வில் கண்ணதாசன் குறித்து பேசுவதற்காக வாலியை அழைத்தது.
அங்கு சென்ற வாலி கண்ணதாசனுக்காக ஒரு கவிதையை கூறினார். ஆக கண்ணதாசன் சொன்னது அனைத்தும் நடந்தது, அவர் அனைத்தையும் நடப்பதற்கு முன்பே கூறினார் என்று கண்ணதாசன் குறித்து வாலி ஒரு பேட்டியில் இந்த நிகழ்வை பகிர்ந்துள்ளார்.
