சினிமாவில் வெற்றி எப்படி இருக்குன்னு அப்பயே எழுதினவர் கண்ணதாசன்.. வாலி சொன்ன புது தகவல்!.
தமிழ் சினிமாவில் உள்ள கவிஞர்களில் மிகவும் முக்கியமானவர் கவிஞர் வாலி. வாலி எழுதிய பல பாடல்கள் தமிழ் சினிமாவில் எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றிகளை கொடுத்துள்ளன.
அவரின் கவிதை எழுதும் ஞானத்தை கண்டு வியந்து போன எம்.ஜி.ஆர் பிறகு அவரது அதிகமான திரைப்படங்களுக்கு பாடல் வரிகளை எழுதும் வேலையை வாலிக்குதான் கொடுத்தார். இதன் மூலமாக வாலியும் எம்ஜிஆரும் நண்பர்களாக இருந்தனர்.
வாலிக்கு முன்பு திரைத்துறையில் ஒரு பெரிய கவிஞர் என்றால் அது கவிஞர் கண்ணதாசன்தான். வாலியைப் பொறுத்தவரை அவருக்கு ஆன்மீகம் ரீதியாக அவருக்கு சில நம்பிக்கைகள் உண்டு. அவர் இது குறித்து பேட்டி ஒன்றில் கூறும் பொழுது ராசியை பொறுத்துதான் ஒரு கவிஞருக்கான வெற்றி அமைகிறது.

எவ்வளவு பெரிய கவிஞராக இருந்தாலும் அவருக்கு சில கதாநாயகர்களுடன் ராசி இல்லை என்றால் அந்த பாடல் வெற்றி அடையாது என்று கூறுகிறார் உதாரணத்திற்கு அவர் முதலில் எழுதிய பாடல் வெற்றி பெறவே இல்லையாம். சினிமாவை பொறுத்தவரை ஒருவனுக்கு திறமை இருக்கிறது என்பதை தாண்டி அவனுக்கு ராசி இருந்தால்தான் அவனால் வெற்றி பெற முடியும்.
பாரதியாராகவே இருந்தாலும் வெற்றி படங்களில் பாடல்கள் எழுதினால்தான் வெற்றி பெற முடியும் இதைதான் கண்ணதாசன் புத்தியுள்ள மனிதன் எல்லாம் வெற்றி காண்பதில்லை வெற்றி பெற்ற மனிதர் எல்லாம் புத்திசாலி இல்லை என்று தனது பாடலில் எழுதி இருந்தார் என்று விளக்கி இருந்தார் வாலி.