Cinema History
அவருக்கு அதிகம் பாட்டு எழுதுனது இல்ல.. ஆனா அவருக்கு நிகரா ஆள் கிடையாது!.. வாலியை அசர வைத்த பிரபலம்!.
Sivaji ganesan, AP Nagarajan : தமிழ் சினிமாவில் கண்ணதாசனுக்கு பிறகு பெரும் பிரபலமாக அறியப்படுபவர் கவிஞர் வாலி. வாலி எழுதிய பல பாடல் வரிகள் பெரும் வெற்றியை கொடுத்துள்ளன. கருப்பு வெள்ளை சினிமா காலக்கட்டத்தில் முன்னணியில் இருந்த பல பிரபலங்களுடன் சேர்ந்து நடித்துள்ளார் வாலி.
முக்கியமாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் இணைந்து பல படங்களில் பணிப்புரிந்திருக்கிறார் வாலி. இருந்தாலும் தமிழின் மிக முக்கியமான பிரபலம் ஒருவருன் பெரிதாக சேர்ந்து பணிப்புரியவில்லை என மிக வருத்ததுடன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார் வாலி.
இயக்குனர் ஏ.பி நாகராஜன்தான் அது. இயக்குனர் ஏ.பி நாகராஜன் தமிழின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவராவார். அவர் இயக்கும் திரைப்படங்கள் எல்லாமே முக்கால்வாசி வெற்றி படங்களாகவே இருக்கும். முக்கியமாக ஆன்மீகம் மீது அதிக ஆர்வம் கொண்டவர் ஏ.பி நாகராஜன்.
இதனால் தெய்வீக திரைப்படங்கள் பலவற்றை இயக்கியுள்ளார் ஏ.பி நாகராஜன். அவர் இயக்கிய திருவிளையாடல் புராணம், காரைக்கால் அம்மையார், நவரத்தினம், திருமலை தெய்வம் போன்ற திரைப்படங்கள் மிகவும் பிரபலமானவை.
ஆனால் இவையெல்லாம் தாண்டி அவருக்கு ஒரு அங்கீகாரத்தை வழங்கிய திரைப்படம் தில்லானா மோகானாம்பாள். இப்படிப்பட்ட ஏ.பி நாகராஜனுடன் ஒரு சில திரைப்படங்களிலேயே வாலி வேலைப்பார்த்தார். அவர் குறித்து வாலி கூறும்போது சில திரைப்படங்களில் வேலை பார்த்தாலும் கூட இப்போது வரை நான் பார்த்து வியக்கும் ஒரு மனிதர் ஏ.பி நாகராஜன்.
முக்கியமாக அவரது தில்லானா மோகனம்பாள் திரைப்படத்தை இயக்க முதலில் நல்ல சங்கீத அறிவு வேண்டும். நாதஸ்வரத்தில் வரும் சங்கீதத்தை தெரிந்துக்கொள்ளாத ஒருவனால் சிக்கல் சண்முக சுந்தரம் போன்ற கதாபாத்திரத்தை உருவாக்க முடியாது, என கூறியுள்ளார் வாலி.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்