Cinema History
படத்துல இருந்து என்ன வேணும்னா தூக்கலாம்!. என் பெயரை தூக்க முடியாது.. எம்.ஜி.ஆருக்கு சேலஞ்ச் விட்ட வாலி!.
தமிழ் திரை நடிகர்களில் மிக முக்கியமானவர் எம்.ஜி.ஆர். நாடக கலைஞராக இருந்து பிறகு தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற்று அதன் பிறகு பெரும் உச்சத்தை பெற்றவர் எம்.ஜி.ஆர்.
தமிழக முதலமைச்சரான முதல் நடிகர் எம்.ஜி.ஆர்தான், திரைப்படங்களில் நடிக்கும்போது கூட மக்களுக்கு நல்ல நல்ல கருத்துக்களை கூறும் வகையில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்துதான் எம்.ஜி.ஆர் நடித்தார். அதே போல எம்.ஜி.ஆர் அவர் நடிக்கும் படங்களில் வரும் பாடல்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தார். அவை நல்ல கருத்துக்களை வெளிப்படுத்தும் பாடலாக இருக்க வேண்டும் என நினைத்தார்.
சில காலங்களுக்கு பிறகு எம்.ஜி.ஆர் தனியாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கினார். அதில் அவர் இயக்கிய திரைப்படத்தில் மிக முக்கியமான திரைப்படம் உலகம் சுற்றும் வாலிபன். உலகின் பல்வேறு நாடுகளையும் சுற்றி வந்து அந்த படத்தை எடுத்தார் எம்.ஜி.ஆர்.
படத்திற்கு மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. வெளிநாடுகளை காட்டியதாலேயே அந்த படம் பெரும் ஹிட் அடித்தது. முதலில் அந்த படத்திற்கு இசையமைக்க குன்னக்குடி வைத்தியநாதனைதான் எம்.ஜி.ஆர் தேர்ந்தெடுத்திருந்தார்.
அப்போது அவரை சந்தித்த வாலி என்ன சார் இன்னும் பாட்டுக்கு எந்த வேலையும் பார்க்க வில்லை போல என கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த எம்.ஜி.ஆர் விளையாட்டாக இவ்வாறு கூறினார். படத்தில் உங்களுக்கு பதிலாக கண்ணதாசனை பாடல் வரிகள் எழுத வைக்க போகிறேன் என்றுள்ளார்.
அதற்கு வாலி படத்தில் இருந்து என்னை தூக்கலாம் ஆனால் என் பெயரை உங்களால் தூக்க முடியாது என கூறியுள்ளார். இவர் என்ன சொல்கிறார் என எம்.ஜி.ஆர் யோசிக்க, உலகம் சுற்றும் வாலிபனில் வாலியை நீக்கிவிட்டால் உலகம் சுற்றும் பன் ஆகிவிடுமே என கலாய்த்துள்ளார் வாலி. இதை அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
