உங்களுக்கு எப்ப அது நடக்கும்.. பத்திரிக்கையாளர் கேள்வியால் கடுப்பான நடிகை வாணி போஜன்..!
சீரியல்கள் மூலமாக தமிழ் சினிமாவிற்கு சென்று வரவேற்பு பெற்ற நடிகைகள் ஒரு சிலர். அப்படியாக தெய்வமகள் என்கிற சீரியலில் நடித்து அதன் மூலமாக அதிக வரவேற்பை பெற்றவர் நடிகை வாணி போஜன்.
தமிழ் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தது. ஓ மை கடவுளே திரைப்படத்திற்கு பிறகு அதிக படங்களில் நடித்த பிறகு வாய்ப்புகளை பெற்று நடித்து வருகிறார்கள் வாணி போஜன்.
இன்னும் லைம் லைட்டில் ஜொலிக்கும் நடிகைகள் அளவிற்கான வரவேற்பு என்பது இவருக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஒரு பேட்டியில் இவரிடம் கேள்வி கேட்ட பத்திரிகையாளர்கள் உங்களுக்கு எப்போது திருமணம் என்கிற கேள்வியை கேட்டனர்.
அதை கேட்டதும் வாணிபோஜன் மிகவும் கோபம் அடைந்து விட்டார். அதனை கண்டு பக்கத்தில் இருந்தவர் சொந்த வாழ்க்கை குறித்த கேள்விகளை கேட்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார். அதற்கு பிறகு வேறு வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார் வாணி போஜன்.