டிடி ரிட்டன்ஸை விட காமெடியா இருக்கா!.. எப்படியிருக்கு வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம்!..

Vadakkupatti Ramasamy: காமெடி நடிகராக இருந்து வந்த சந்தானம் கதாநாயகனாக நடிக்க துவங்கியது முதல் தொடர்ந்து காமெடி கதாநாயகனாகதான் நடித்து வருகிறார். ஓரளவு அது மக்கள் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு இருப்பதால் அந்த மாதிரியான திரைப்படங்களுக்கு வரவேற்பும் இருந்து வருகிறது.

ஆனால் சில திரைப்படங்களில் சந்தானம் காமெடி செய்தாலும் கூட மற்றவர்களுக்கு சிரிப்பு வரவில்லை என்றுதான் கூற வேண்டும். தில்லுக்கு துட்டு மாதிரியான திரைப்படங்கள் சந்தானம் திரைப்படங்களில் நல்ல நகைச்சுவையான திரைப்படங்களாக அமைந்துள்ளன. அந்த வகையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் எப்படி இருக்கிறது என பார்க்கலாம்

Social Media Bar

வடக்குப்பட்டி ராமசாமி படத்தை பொருத்தவரை ஊரில் இருக்கும் ஒரு கோவிலை வைத்து மூட நம்பிக்கையை வளர்த்து மக்களிடம் பணம் பறிக்கும் ஒரு நபராக சந்தானம் இருக்கிறார். கவுண்டமணி காமெடியில் எப்படி வடக்குப்பட்டு ராமசாமியிடம் பணம் கொடுத்தால் திரும்ப வராதோ அதேபோல சந்தானத்திடமும் பணம் கொடுத்தால் அது திரும்ப வராது.

இதற்கு நடுவே சில காரணங்களால் அந்த கோவில் மூடப்படவே அதை திரும்ப திறப்பதற்கான முயற்சிகளில் சந்தானம் செய்யும் செயல்களே படமாக உள்ளது. இந்தப் படத்தில் காமெடி காட்சிகள் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி உள்ளன டிடி ரிட்டன்ஸ், ஏ1 திரைப்படத்தைப் போல இந்த படமும் குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் ஒரு திரைப்படமாக இருப்பதால் இந்த படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது.