இளையராஜா பயோபிக்கில் வடிவேலு.. அப்போதே வரவிருந்த திரைப்படம்..!
தமிழ் சினிமாவில் உள்ள இணையற்ற இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் இளையராஜா. கடந்த சில காலங்களாக தமிழ் சினிமாவில் ஒரு வெற்றி இசையமைப்பாளராக அவர் இருந்து வந்திருக்கிறார். தமிழில் எக்கச்சக்கமான திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் இளையராஜா.
அதனால்தான் இப்போதும் கூட கொண்டாடப்படும் ஒரு இசையமைப்பாளராக அவர் இருந்து வருகிறார். இந்த நிலையில் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கி அதில் நடிக்க வேண்டும் என்பது நடிகர் தனுஷின் பல நாள் கனவாக இருந்தது.
இளையராஜா வாழ்க்கை வரலாறு:
சினிமாவிற்கு வரும்போதே நடிகர் ரஜினி மற்றும் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கி அதில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார் தனுஷ்.

இந்த நிலையில் அவருடைய முதல் ஆசை நிறைவேறும் வகையில் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு வருகிறது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
வெகுவாக இந்த திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு இருந்து வருகிறது பலரும் அறியாத இளையராஜாவின் வாழ்க்கையை இந்த படத்தில் காணலாம் என கூறப்படுகிறது.
வடிவேலு நடிக்க இருந்த படம்:
இந்த நிலையில் இதற்கு முன்பே இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட இருந்ததாக கூறப்படுகிறது. இளையராஜாவின் மோதிரம் என்று இந்த படத்திற்கு பெயர் வைக்க நினைத்திருக்கின்றனர். வடிவேலு இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார். மேலும் இந்த திரைப்படத்தில் இளையராஜாவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் திடீரென இந்த படத்தில் இருந்து இளையராஜா ஏதோ ஒரு காரணத்தினால் விலகி விட்டாராம். பிறகு ரஜினிகாந்த் அந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு ஆர்வமாக இருந்ததாக கூறப்படுகிறது. இருந்தாலும் அந்த திரைப்படம் நின்று விட்டது பிறகு படபிடிப்பு நடக்கவில்லை ஆனால் அந்த திரைப்படம் இளையராஜா வாழ்க்கை கதையை கொண்ட படம் தான் என்று கூறப்படுகிறது.