News
என்னை வைத்து குளிர்காய நினைக்கிறார்கள்!.. இளையராஜா சர்ச்சை குறித்து பேசிய வைரமுத்து..!
இளையராஜா வைரமுத்து குறித்த சர்ச்சை தான் கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் பேசு பொருளாக இருந்து வருகிறது. சமீபத்தில் ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட வைரமுத்து ஒரு பாடலுக்கு இசை முக்கியமா அல்லது மொழி முக்கியமா என்பது குறித்து பேசி இருந்தார்.
அது சமூக வலைதளங்களில் அதிக சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது ஏனெனில் இளையராஜா வெகு காலங்களாக தன்னுடைய இசைக்கான காப்புரிமை தனக்கு வேண்டும் என்று போராடிவரும் நிலையில் காப்புரிமை என்பது இசையமைப்பாளருக்கு மட்டுமே கிடையாது என்னும் வகையில் வைரமுத்து பேசியிருக்கிறார்.

கங்கை அமரன் பேச்சு:
இந்த நிலையில் இதற்கு பதில் அளிக்கும் வகையில் கங்கை அமரன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் வைரமுத்து நன்றி மறந்து பேசுவதாக இருந்தது அவரது உரையாடல்.
இதற்கு நடுவே புது சிம்பொனியை உருவாக்கிய இளையராஜா அது குறித்து வீடியோ வெளியிடும் பொழுது இணையத்தில் வெளியாகும் விஷயங்களை எல்லாம் நான் கவனிப்பதில்லை என்னுடைய இசை பயணத்தில்தான் கவனம் செலுத்தி வருகிறேன் என்று பேசியிருந்தார்.

இதனை அடுத்து தற்சமயம் வைரமுத்து ஒரு செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பொழுது அவரிடம் இளையராஜா குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அப்பொழுது இளையராஜா குறித்து என்னிடம் எந்த ஒரு கேள்வியும் கேட்காதீர்கள் என்று நேரடியாகவே கூறிவிட்டார் வைரமுத்து.
வைரமுத்து பதில்:
இருந்தாலும் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து இளையராஜா குறித்து சர்ச்சை கேள்விகளை கேட்டதால் கடுப்பான வைரமுத்து நான் சர்ச்சைக்கு பிறந்தவன் இல்லை. என்னை வைத்து நீங்கள் சர்ச்சை செய்திகளை உருவாக்க பார்க்கிறீர்கள். ஆனால் அதில் எனக்கு விருப்பமில்லை என்னை வைத்து குளிர்காய நினைக்கிறார்கள் நான் அவற்றை விட்டு தள்ளி நிற்கவே ஆசைப்படுகிறேன் என்று வெளிப்படையாக கூறி இருக்கிறார் வைரமுத்து.
