Cinema History
ஆளாளுக்கு ஒரு குட்டிஸ்டோரி சொல்ல ஆரம்பிச்சிட்டாங்கப்பா… கவிப்பேரரசுவின் குட்டி ஸ்டோரி…
Vairamuthu : கவிப்பேரரசு வைரமுத்து தமிழ் கவிதைகள், பாடல்கள் என தனக்கென ஒரு தனி படைப்புத் திறமையை கொண்டிருப்பவர். இவர் பாடல்கள் தான் என் படத்திற்கு தேவை என்று காத்திருந்து பாடல்கள் பெற்ற இயக்குனர்களும் இருக்கிறார்கள்.
80 மற்றும் 90 களில் இவருடைய பாடலுக்கு செவிசாய்க்காத ரசிகர்களே கிடையாது. கடந்த சில காலமாக இவர் பொதுப் பிரச்சனைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்.
தனது கவிதை மூலம் பாதிக்கப்பட்ட மக்கள் உணர்வுகளை அழுத்தமான எழுத்துக்கள் மூலம் உலகிற்கு எடுத்துச்சொல்லும் கலைஞனாக தனது பணியை சிறப்பாகச் செய்துவருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மேடைப் பேச்சு ஒன்றில் குட்டிக்கதை ஒன்றை கூறி அனைவருக்கும் சிந்தனையை எழுப்பிவிட்டவர் இவர்தான்.
அந்தக் கதையானது ஒரு திருடன் ஏழாவது மாடியில் உள்ள ஒரு கடையில் திருட வேண்டும் அவனால் கீழிருந்து செல்ல முடியாது ஏனென்றால் கீழே உள்ள கதவுகள் அடைக்கப்பட்டுள்ளது எப்படி மேலே செல்வது என்று சிந்தித்துக்கொண்டிருக்க திருடன் வீதியை பார்க்கிறான் அங்கே ஒரு மனிதன் கயிற்றின் மீது ஏறி நடந்து தனது வித்தைகளை மக்களுக்கு காண்பித்துக் கொண்டிருந்தான் அவனது வேலை அதுதான்.
திருடனுக்கு ஒரு யோசனை வருகிறது. அந்த கயிற்றின் மேல் நடக்கும் மனிதனை வைத்து எப்படியாவது மேலே ஏறிவிட வேண்டும் என்று எண்ணி அன்று இரவு அந்த மனிதனை அழைத்து கயிறு கட்டி மேலே ஏறச்சொல்கிறான்.
அந்த மனிதன் கயிற்றின் மீது ஏறி நின்றுவிட்டு 7வது கடையை நோக்கி நடக்காமல் அமைதியாக நின்றுகொண்டிருக்கிறான். அவனைப்பார்த்து அந்த திருடன் ஏன் நடக்காமல் நிற்கிறாய் நட, நடந்து அந்த கடையின் கதவை உடை என்றான்.
அதற்கு அந்த மனிதன் என்னால் முடியாது கீழே மக்கள் நின்று கைத்தட்டி உற்சாகப்படுத்தினால் தான் நான் மேலே ஏறமுடியும் என்று கூறியிருக்கிறான் இதனை கேட்ட திருடன் திகைத்து நின்று அந்த திருட்டு சிந்தனையை விட்டுவிட்டு சென்றுவிட்டான் என்ற கதையை வைரமுத்து மேடையில் கூறியிருக்கிறார்.
“உழைப்பவன் உழைத்துக்கொண்டே இருக்கிறான். திருடுபவன் திருடிக்கொண்டே இருக்கிறான்” என்று கூறி மக்களை சிந்திக்க வைத்தவர் வைரமுத்து.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்