Cinema History
நீங்கதான் அந்த பாட்டை எழுதுனதா? வாலியை குண்டு கட்டாய் தூக்கி சென்ற எம்.ஜி.ஆர் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் வாலிப கவிஞர் என எல்லாராலும் புகழப்படுபவர் கவிஞர் வாலி. ஏன் என்றால் எம்.எஸ்.வி காலம் தொடங்கி இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் காலம் வரை வாலி எழுதாத பாடல்களே இல்லை. அதை ரசிக்காத தலைமுறைகளே இல்லை எனலாம்.
என்னதான் வாலி ஏராளமான பாடல்கள் எழுதி இருந்தாலும் வாலியின் சினிமா நுழைவின் ஆரம்ப கட்டங்களில் சவால்களும் இருந்து வந்தது. அப்படியொரு சவால்தான் எம்.ஜி.ஆர் படங்களுக்கு பாடல் வரிகள் எழுதுவது. எம்.ஜி.ஆர் பாடல்களில் சாமனியர்களுக்கு அதிகம் பிடித்த பாடல்களாக அவரது தத்துதவ புரட்சி பாடல்களே இருந்து வந்தது. எம்.ஜி.ஆரின் ஆரம்ப கட்டத்தில் இவ்வாறான புரட்சி பாடல்களை எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். ஆனால் பட்டுக்கோட்டையார் மறைவிற்கு பிறகு அந்த இடத்தை நிரப்புவது பல கவிஞர்களுக்கும் கடினமாகவே இருந்தது.
இந்த நிலையில்தான் எம்ஜிஆர் நடித்த ‘எங்க வீட்டு பிள்ளை’ படத்தில் பாடல்கள் எழுத வாலி அமர்த்தப்பட்டார். வாலியும் தனக்கு தோன்றியவாறு சிச்சுவேஷனுக்கு ஏற்ப பாடல்களை எழுதி கொடுத்து விட்டார். எங்க வீட்டு பிள்ளை படம் சென்னை கேசினோ தியேட்டரில் ரிலீஸ் ஆனபோது அதை பார்க்க வாலி சென்றுள்ளார். தியேட்டர் முழுக்க எம்ஜிஆர் ரசிகர்கள்.
அப்போது நம்பியாரிடம் இருந்து சாட்டையை பிடுங்கி சுழற்றிய எம்ஜிஆர் பாடுகிறார் “நான் ஆணையிட்டால்.. அது நடந்து விட்டால்..” திரையரங்கில் சற்று நேரம் மௌனம். பிறகு எல்லாரும் உற்சாகமாக ஆட தொடங்கி விட்டார்களாம். படம் முடிந்தபோது இவர்தான் அந்த பாடலை எழுதியவர் என வாலியை யாரோ சுட்டிக்காட்டவும் சூழ்ந்து கொண்ட வாத்தியார் ரசிகர்கள் அவரை அலேக்காக மேலே தூக்கிக் கொண்டு தியேட்டருக்கு உள்ளிருந்து வெளிப்புறம் வரை உற்சாக உலா வந்துள்ளனர். இதை வாலி ஒரு நேர்காணலில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்