Latest News
ஜஸ்ட் மிஸ் ஆச்சு.. பீஸ்ட்டை தோற்கடித்த வலிமை! – கலெக்ஷன் எவ்வளவு?
விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் வலிமையின் சாதனையை முறியடிக்க முடியாமல் திணறியுள்ளது.
விஜய் நடித்து நெல்சன் இயக்கிய படம் பீஸ்ட். கடந்த 13ம் தேதி இந்த படம் வெளியான நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. ஆனாலும் வசூலிலும் தொய்வில்லாமல் தொடர்ந்து நல்ல வசூலை கண்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது வெளியான தகவலின்படி பீஸ்ட் திரைப்படம் தமிழகத்திற்குள் மட்டும் முதல் மூன்று நாட்களில் வசூல் செய்த தொகை ரூ.75 கோடி என தெரியவந்துள்ளது. அதேசமயம் வலிமை வெளியானபோது தமிழகத்திற்குள் 3 நாட்களில் ரூ.80 கோடி வசூல் செய்திருந்தது. 5 கோடி ரூபாய் வித்தியாசத்தில் பீஸ்ட் வசூலை வலிமை தோற்கடித்துள்ளது.
ஆனால் பீஸ்ட் தொடர்ந்து திரையரங்குகளில் ஓடிவரும் நிலையில் மொத்த வசூலில் வலிமையை தாண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நெல்சன் ஓ.கேதானா? முடிவு ரஜினி கையில்..! – என்னவாகும் தலைவர் 169?
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்