News
நெல்சன் ஓ.கேதானா? முடிவு ரஜினி கையில்..! – என்னவாகும் தலைவர் 169?
பீஸ்ட் படத்திற்கான எதிர்மறை விமர்சனங்களால் நெல்சன் – ரஜினி காம்போவில் படம் எடுப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

விஜய் நடித்து நெல்சன் இயக்கி வெளியான படம் பீஸ்ட். படம் வெளியான நாள் முதலே கலவையான விமர்சனங்களை இந்த படம் பெற்றுள்ள நிலையில், வசூலும் எதிர்பார்த்த அளவில் இல்லை என கூறப்படுகிறது.
இதனால் நெல்சன் மீது அதிருப்தி அடைந்துள்ள சன் பிக்சர்ஸ் தனது அடுத்த படமான தலைவர் 169ஐ நெல்சனை வைத்து இயக்குவது குறித்து தயக்கம் காட்டி வருகிறதாம். எனினும் இதுகுறித்த முடிவை ரஜினியே எடுக்கட்டும் என அவர் கையில் முடிவை கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது.
ஒருவேளை ரஜினி இந்த ப்ராஜெக்டில் நெல்சன் வேண்டாம் என முடிவு செய்தால் யார் இயக்குனர் ஆவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
