News
ரித்திகா சிங்கிற்கு க்ளைமேக்ஸில் ஆப்பு வைத்த வாணி போஜன்… இப்போ வரை பேசிக்கிறது இல்லையாம்!.
Vani Bhojan: தமிழ் சினிமாவில் சில நடிகைகள் சின்னத்திரையின் மூலம் வெள்ளித்திரையில் நுழைந்து தனக்கான இடத்தை பதித்து விடுவார்கள். அந்த வகையில் தமிழ் சீரியலில் அறிமுகமான நடிகை தான் வாணி போஜன். இவரை அனைவரும் சின்னத்திரை நயன்தாரா என்று தான் கூறுவார்கள். இவர் முதன் முதலில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ஆஹா தொடரின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ஜெயா டிவியில் மாயா என்ற தொடரில் நடித்தார். பிறகு சன் டிவியில் தெய்வமகள் என்ற தொடரில் நடித்தார்.
சன் டிவியில் தெய்வமகள் தொடர் மூலம் அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார். அதில் அவரின் பெயர் சத்யாவாக நேற்று நடித்திருந்தார். எனவே வாணி போஜன் என்ற இயற்பெயரை மறந்து அனைவரும் சத்யா என்று தான் அழைத்தார்கள்.
தெய்வமகள் சீரியல் கொடுத்த வரவேற்பிற்கு பிறகு வாணி போஜனுக்கு தமிழ் சினிமா வாய்ப்புகள் வர தொடங்கியது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் கிடைத்த வாய்ப்பு ஒன்றை எவ்வாறு பயன்படுத்தினேன் என்பதை குறித்து பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார்.
சின்னத்திரை நயன்தாரா
தெய்வமகள் மூலம் சத்யாவாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான வாணி போஜன் ஊட்டியில் பிறந்தவர்.
மேலும் சீரியலுக்கான பல விருதுகளை இவர் பெற்றிருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த ஓ மை கடவுளே என்ற படத்தில் மீரா கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த கதாபாத்திரம் தமிழ் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது.

மேலும் பல திரைப்படங்களில் நடித்த வாணி போஜன் தற்சமயம் பல படங்கள் கைவசம் வைத்திருக்கிறார்.
ரித்திகா சிங்கின் வாய்ப்பை பறித்த வாணி போஜன்
தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் வாணி போஜன் இயக்குனர் ஒருவர் படத்தின் கதையை சொல்லுவதற்காக தனக்கு போன் செய்ததாகவும், ஆனால் அந்த படத்தின் கதை எனக்கு பிடிக்கவில்லை என்றும் கூறிவிட்டேன். அதன் பிறகு என்னுடைய நண்பர்கள் ஏன் அந்த படத்தை வேண்டாம் என்று கூறினாய், ஒருமுறை நேரில் சென்று கேட்டுப்பார் என கூறினார்கள். பிறகு நான் இயக்குனருக்கு போன் செய்து நேரில் கேட்கலாமா என கேட்டேன். அவரும் இன்று வாருங்கள் என கூறி கதை சொன்னார். எனக்கு கதை மிகவும் பிடித்து விட்டது.
அப்பொழுதுதான் இயக்குனர் என்னிடம் கூறினார். நீங்கள் மட்டும் இன்று வராமல் இருந்திருந்தால் நான் இந்த கதையை ரித்திகா சிங் அவருக்கு கூறுவதாக இருந்தேன் என அவர் கூறியிருக்கிறார்.
இது எனக்கு மிகவும் கஷ்டத்தை ஏற்படுத்தி விட்டதாகவும், நான் அவரின் வாய்ப்பை பறித்து விட்டேன் என்பது போல் உணர்ந்தேன். ஆனால் இயக்குனர் இல்லை இந்த கதாபத்திற்கு நீங்கள் பொருத்தமாக இருப்பீர்கள் எனக் கூறியதால் நான் சம்மதித்தேன். என வாணி போஜன் கூறியிருக்கிறார்.
