Bigg Boss Tamil
பிக்பாஸ் ஓட்டு எல்லாம் கண்ணாமூச்சு வேலையா?.. ஜோவிகா எவிக்ஸனால் கடுப்பாகும் வனிதா!..
Biggboss tamil Jovika : பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் கொஞ்சம் சுறு சுறுப்பாக பிரச்சனைகளை கிளப்பினாலும் போக போக ஜோவிகா விக்ரம் போலவே சும்மாவே வீட்டில் இருந்து வருகிறார். முக்கியமாக அவர் அதிகமாக உறங்குகிறார் என்பது பெரும் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.
தினமும் குறைந்தது மூன்று முறையாவது இவர் உறங்கிவிடுகிறார். பிறகு இவரை எழுப்புவதற்காக நாய் குரைக்கும் சத்தத்தை பிக்பாஸ் போடுகிறார். ஏனெனில் எப்போதும் தூங்குவதற்கு பிக்பாஸில் அனுமதியில்லை. அவர்கள் ஏதாவது கண்டெண்ட் செய்து மக்களுக்கு சுவாரஸ்யமாக இந்த நிகழ்ச்சியை கொண்டு செல்ல வேண்டும்.
இந்த நிலையில் மக்கள் அளிக்கும் ஓட்டின் அடிப்படையில் வாரம் ஒருவர் இதில் எலிமினேட் செய்யப்படுவார்கள். அந்த வகையில் இந்த வாரம் ஜோவிகா வெளியேற்றப்பட போகிறார் என பேச்சுக்கள் இருந்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று இதுக்குறித்து விடியோவில் பேசிய வனிதா, ஒரு போட்டியாளர் என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் ஜோவிகா சரியாக செய்தாள்.

அவள் சரியாக கண்டெண்ட் கொடுக்கிறாள். அவள் ஒரு நல்ல நேர்மையான போட்டியாளர். அவங்க மீது எந்த ஒரு ரெட் மார்க்கும் கிடையாது, அங்கு ஒண்ணுமே செய்யாமல் பலப்பேர் இருக்கிறார்கள் இந்த நிலையில் அனைவரும் ஓட்டு போட்டு ஜோவிகா எலிமினேட் செய்யப்படுகிறார் எனில் இது ஒரு சரியான நிகழ்ச்சியே கிடையாது என்று கூறியுள்ளார் வனிதா.
அப்படியென்றால் ஓட்டு என்பதெல்லாம் சும்மா கண் துடைப்பு வேலையா என்கிற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் ஜோவிகா அவ்வளவு சிறப்பான போட்டியாளர் எல்லாம் கிடையாது என்றும் ஒரு சாரார் கூறி வருகின்றனர்.
