Movie Reviews
இந்த சீரிஸில் நடிச்சதுக்கு வேதிகா சும்மாவே இருந்திருக்கலாம்.. யக்ஷினி சீரிஸ் முழு விமர்சனம்..!
வெப் சீரிஸ் என்பது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. பெரும்பாலும் நடிகர் நடிகைகள் வெப் சீரிஸில் நடிப்பதற்கு ஆர்வம் காட்ட இதுவே காரணமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் நடிகை வேதிகா நடித்து வெளியான வெப் சீரிஸ்தான் யக்ஷினி. தமிழ் சினிமாவில் பெரிதாக வரவேற்பு இல்லாமல் இருந்து வரும் வேதிகா இந்த சீரிஸின் மூலமாக் வாய்ப்புகளை பெறுவதற்காக இதில் நடித்துள்ளார்.
சீரிஸின் கதை:
குபேரன் அரசனாக இருக்கும் ஒரு உலகத்தில் பல யக்ஷிகள் வாழ்கின்றனர். யக்ஷி என்பவர்கள் ஆண்களை மயக்க கூடிய துர் சக்திகள் ஆவர். அதில் மாயா என்னும் யக்ஷி மட்டும் ஒரு மனிதனை காதலித்து விடுகிறார். இதனால் கடுப்பான குபேந்திரன். 100 ஆண்களை வசியப்படுத்தி படுக்கையை பகிர்ந்து பிறகு அவர்களை கொல்ல வேண்டும்.

அப்போதுதான் மீண்டும் யக்ஷி உலகத்திற்கு வர முடியும் என கூறிவிடுகிறார். ஆனால் 100ஆவது நபராக இருக்கும் ஆண் கன்னி பையனாகவும், சாவுக்கு பயப்படாதவனாகவும் இருக்க வேண்டும்.
இந்த நிலையில் அப்படி ஒருவன் மாயாவிற்கு கிடைக்கிறார். அவர்தான் கதாநாயகன். இதற்கு நடுவே மாயாவை பிடிக்க முயற்சி செய்து வரும் மந்திரவாதி ஒருவனும் இருக்கிறான்.
இந்த நிலையில் 100 ஆவது கொலையை மாயா எப்படி செய்ய போகிறார் என்பதே கதை. மாயாவாகதான் வேதிகா நடித்துள்ளார்.
விமர்சனம்:
பொதுவாக சீரிஸ்கள் கதையை நம்பிதான் எடுக்கப்படும். ஆனால் இந்த சீரிஸ் முழுக்க முழுக்க கவர்ச்சியை நம்பி எடுக்கப்பட்டுள்ளது. கதையில் வேதிகா தோன்றும் இடம் எல்லாம் கவர்ச்சியாக மட்டுமே தோன்றுகிறார்.

கதையில் எந்த ஒரு வேகமும் இல்லை. ஒரு சீரிஸிற்கான அந்தஸ்தில் இல்லாமல் சீரியல் போல இருக்கிறது இந்த தொடர். பார்ப்பதற்கு கிட்டத்தட்ட நாகினி தொடரின் சாயல் தான் இருக்கிறது.
இதனை தொடர்ந்து இந்த சீரிஸிற்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கவில்லை.
