Connect with us

மகளையே திருமணம் செய்த வேலராம மூர்த்தி- இதுதான் காரணமாம்…

velraramamoorty

News

மகளையே திருமணம் செய்த வேலராம மூர்த்தி- இதுதான் காரணமாம்…

Social Media Bar

Vela Ramamoorthy: சினிமாவில் நடிக்கும் பல நடிகர்களின் உண்மையான திறமை என்னவென்று நமக்கு தெரியாது. அவர்களை பற்றி நாம் கட்டுரைகளில் அல்லது பேட்டிகளில் பார்த்து தான் தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் வேல ராமமூர்த்தி என்பவர் தமிழ் திரைப்படங்களில் ஒரு சில கதாபாத்திரங்களில் தோன்றி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்.

அவர் தற்பொழுது கூறி இருக்கும் கருத்து ஒன்று சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

வேல ராமமூர்த்தி

தமிழ் திரைப்படங்களில் நடித்தவர். மேலும் இவர் எழுத்தாளர் ஆவார். இவர் தமிழ் திரைப்படங்களில் நடிகராக நடிக்க வருவதற்கு முன்பு தமிழ் சமுதாயத்திற்கு கல்வி அறிவும், அறிவும் வழங்கும் அரசின் சிறப்பு திட்டமான அறிவொளி இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக பல ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.

மேலும் இவர் இந்திய ராணுவத்தில் ஐந்தாண்டுகள் பணியாற்றினார். அதன் பிறகு தபால் நிலையத்தில் பணியில் சேர்ந்தார். இவர் புகழ்பெற்ற பல நாவல்களை எழுதியுள்ளார். மேலும் தமிழ் முன்னணி கதை எழுத்தாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.

தற்பொழுது பல படங்களில் வில்லனாகவும், குணசத்திர வேடங்களில் நடித்து வரும் வேல ராமமூர்த்தி தற்பொழுது கூறியிருக்கும் ஒரு கருத்து சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி வருகிறது.

மகளை திருமணம் செய்து கொண்ட வேல ராமமூர்த்தி

சன் டிவியில் பிரபலமாக ஓடிக் கொண்டிருந்த எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்துவின் இறப்பிற்கு பிறகு இவர் அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.

மாரிமுத்து நடித்த கதாபாத்திரம் இவருக்கு பொருத்தமாக அமைந்தது. மேலும் இவர் சமீபத்தில் கூறியிருப்பதாவது மகள் முறை வரும் பெண்ணை தான் நான் திருமணம் செய்து கொண்டிருப்பதாக கூறினார்.

Vela Ramamoorthy

அனைவரும் அது எவ்வாறு மகள் முறை வரும் பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம்? என சர்ச்சைகளை கிளப்பி உள்ளனர்.

அவர் youtube சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் காதல் திருமணம் நீங்கள் செய்து கொண்டீர்களா? என கேட்ட கேள்விக்கு நான் என்னுடைய சொந்தத்தில் திருமணம் செய்தேன். அதுவும் என்னுடைய சொந்த மதினியின் மகளைத்தான் நான் திருமணம் செய்து கொண்டேன் என கூறி அதிர்ச்சியை கிளப்பினார்.

நாங்கள் அக்கா மகளை கல்யாணம் செய்ய மாட்டார்கள் எனவும், ஏனெனில் அக்கா மகள் எங்களுக்கு மகள் முறை எனவும், எங்க ஆளுங்க இவ்வாறு தான் திருமணம் செய்து கொள்வோம் என குழப்பத்தை ஏற்படுத்தினார்.

இது சமூக வலைத்தளங்களில் தற்பொழுது பேசுபொருளாகியுள்ளது.

To Top