Cinema History
அஜித் வில்லனா நடிக்கணும்!.. வாயை விட்டு அஜித்திடம் வாய்ப்பை இழந்த வெங்கட் பிரபு!.
Ajithkumar : துணிவு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் அஜித் உலகைச் சுற்றிவர வேண்டும் என்கிற ஆசையில் தனது இரு சக்கர வாகனத்தில் பல நாடுகளுக்கு பயணம் செய்து வந்தார். இதனால் இடையில் சில காலங்கள் அவர் திரைப்படங்களே நடிக்காமல் இருந்தார்.
இந்த நிலையில் தற்சமயம் விடாமுயற்சி படத்தில் நடித்து வந்து கொண்டுள்ளார். விடாமுயற்சி திரைப்படத்தை தயாரிப்பதில் லைக்கா நிறுவனத்திற்கு பணரீதியாக சில பிரச்சனைகள் இருப்பதால் தற்காலிகமாக அதன் படபிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
எனவே மீண்டும் அஜித் ஒரு சுற்று பயணம் சென்றிருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து தீபாவளிக்காவது விடாமுயற்சி திரைப்படம் வருமா என்று கவலையில் இருக்கின்றனர் அஜித் ரசிகர்கள். அஜித்தை வைத்து பெரும் வெற்றி கொடுத்த இயக்குனர்களில் முக்கியமானவர் வெங்கட் பிரபு.

அஜித்தை வைத்து இவர் இயக்கிய மங்காத்தா திரைப்படம் அப்போது எதிர்பார்த்ததை விட பெரிய வெற்றியை கொடுத்தது. ஆனால் மங்காத்தா திரைப்படத்திற்கு பிறகு அஜித் எந்த வெங்கட் பிரபு திரைப்படத்திலுமே நடிக்கவில்லை.
அது ஏன் என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளன. வெங்கட் பிரபு மங்காத்தா திரைப்படத்தை இயக்கிய பொழுது அதில் நடிப்பதற்கு விஜய்க்கு விருப்பம் இருந்தது. ஆனால் அந்த படம் வெளியான பிறகுதான் அந்த விஷயத்தை விஜய் வெங்கட் பிரபுவிடம் கூறியிருந்தார். அந்த அர்ஜுனின் கதாபாத்திரம் நன்றாக இருந்தது அதை நான் நடித்திருந்திருப்பேன் என்று விஜய் கூறினார்.

இதனையடுத்து விஜய் அஜித்தை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கலாம் என்று முடிவு எடுத்தார் வெங்கட் பிரபு. இந்த திரைப்படத்தில் விஜய் கதாநாயகனாகவும் அஜித்தை வில்லனாகவும் நடிக்க வைக்கலாம் என்று முடிவெடுத்திருந்தார். மங்காத்தா திரைப்படத்திலேயே அஜித் ஒரு வில்லன் கதாபாத்திரம்தான் என்பதால் மக்கள் அவரை வில்லனாக ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைத்தார் வெங்கட் பிரபு.
ஆனால் விஜய் திரைப்படத்தில் நான் வில்லனாக நடிக்க முடியாது என்று கூறிய அஜித் அதற்கு பிறகு வெங்கட் பிரபுவிற்கு எந்த திரைப்படத்திலும் வாய்ப்பு கொடுக்கவில்லை. முக்கியமாக நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை வெங்கட் பிரபுதான் இயக்க இருந்தது ஆனால் அஜித் அந்த திரைப்படத்திலும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. இதனையடுத்து தற்சமயம் விஜயை வைத்து கோரட் திரைப்படத்தை இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு.
