Connect with us

ரத்தன் டாடாவோட மேனஜர் என்கிட்ட பதறி வந்தாரு!.. மாஸ் காட்டிய செஃப் வெங்கடேஷ் பட்..

vengatesh bhatt 1

News

ரத்தன் டாடாவோட மேனஜர் என்கிட்ட பதறி வந்தாரு!.. மாஸ் காட்டிய செஃப் வெங்கடேஷ் பட்..

Social Media Bar

விஜய் டிவி மூலமாக மக்கள் மத்தியில் வெகுவாக பிரபாலமானவர் செஃப் வெங்கடேஷ் பட். விஜய் டிவி சேனல் துவங்கிய காலம் முதலே அதில் முக்கிய அங்கமாக செஃப் வெங்கடேஷ் பட் இருந்து வந்துள்ளார்.விஜய் டிவியில் நடந்த எக்கச்சக்கமான டிவி நிகழ்ச்சிகளில் வெங்கடேஷ் பட்டை பார்த்திருக்க முடியும்.

கிச்சன் கில்லாடிஸ் மாதிரியான நிகழ்ச்சிகளில் வெங்கடேஷ் பட் மிகவும் டெரராக இருப்பார். அவரை பார்த்தாலே பயமாக இருக்கும். ஆனால் போக போக அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வந்தப்பிறகு ஜாலியான ஆளாக மாறிவிட்டார்.

குக் வித் கோமாளியில் வெங்கடேஷ் பட்:

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குப்பெற்றப்போது மிகவும் ஜாலியான கதாபாத்திரமாக அறிமுகமானார் வெங்கடேஷ் பட். அதனை தொடர்ந்து அவருக்கு நிறைய ரசிகர்கள் உருவாக துவங்கினார்கள். குக் வித் கோமாளி அடுத்தடுத்த சீசன்கள் வர துவங்கிய பிறகு வெங்கடேஷ் பட்டும் அதன் மூலமாக பிரபலமானார்.

vengatesh bhatt
vengatesh bhatt

இந்த நிலையில் விஜய் டிவியில் பணிப்புரிந்து வந்த அதே காலக்கட்டத்தில் தாஜ் மாதிரியான நட்சத்திர விடுதிகளிலும் பணிப்புரிந்து வந்தார் வெங்கடேஷ் பட். இந்த நிலையில் வெங்கடேஷ் பட் ஒரு பேட்டியில் பேசும்போது அவரது தொழில் தொடர்பான விஷயங்களை பகிர்ந்துள்ளார் வெங்கடேஷ் பட்.

தாஜ் ஹோட்டலில் கிடைத்த மரியாதை:

நீங்களே உங்களை பெருமையாக நடக்கும் விதத்தில் ஏதாவது நடந்துள்ளதா என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த வெங்கடேஷ் பட் கூறும்போது தாஜ் ஹோட்டலுக்கு நான் பணிப்புரிய சென்றப்போது ஒரு சிறிய சமையல் தொழிலாளியாகதான் சென்றேன்.

ஆனால் அங்குச் சென்றப்போது எனது திறமையை பார்த்து ஒவ்வொரு வருடமும் எனக்கு பதவி உயர்வு கொடுத்துக்கொண்டே இருந்தனர். அடுத்த 5 ஆண்டுகளில் தாஜ் உணவகத்தின் முக்கிய பொறுப்பில் நான் இருந்தேன். அப்போது தாஜ் ஹோட்டலின் சி,இ.ஒ என்னை நேரில் சந்திக்க வந்தார்.

vengatesh-bhat
vengatesh-bhat

டாடா நிறுவனம் முதன் முதலாக டீ கம்பெனி துவங்கியப்போது அதில் மேனாஜராக இருந்தவர் அந்த நபர். அப்படிப்பட்டவர் என்னை நேரில் சந்தித்து இந்த நிறுவனத்தின் வேலையை மட்டும் விட்டு விடவே கூடாது என கேட்டுக்கொண்டார். அதுதான் என் வாழ்க்கையில் என்னை பெருமைப்பட வைத்த தருணம் என்கிறார் வெங்கடேஷ் பட்.

Articles

parle g
madampatty rangaraj
To Top