News
நன்றி கடனை காப்பாத்ததான் விஜய் டிவியை விட்டு வந்தேன்!.. விளக்கம் கொடுத்த வெங்கடேஷ் பட்!.
கிட்டத்தட்ட பல வருடங்களாக வெங்கடேஷ் பட் விஜய் டிவியில் இருந்து வந்தவராவார். ஆனால் சமீபத்தில் அவர் விஜய் டிவியில் இருந்து விலகி சன் டிவியில் டாப் குக் டூப் குக் என்கிற நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டார். கிட்டத்தட்ட விஜய் டிவிக்கு விஜய் டிவி என பெயர் வைக்கப்பட்ட காலத்தில் இருந்து விஜய் டிவியில் இருந்து வந்த வெங்கடேஷ் பட் எதற்காக சன் டிவிக்கு சென்றார் என்பது பலரது கேள்வியாக இருந்தது.
விஜய் டிவிக்கும் வெங்கடேஷ் பட்டுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதனால்தான் அவர் விஜய் டிவியை விட்டு விலகியுள்ளார் என்றெல்லாம் பேச்சுக்கள் இருந்து வந்தன. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் இதற்கு பதிலளித்துள்ளார் வெங்கடேஷ் பட்.

அதில் அவர் கூறும்போது நான் விஜய் டிவியில் நிகழ்ச்சிகளில் பங்கு பெற துவங்கிய நாள் முதலே மீடியா மெசன்ஸ் என்னும் ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் கீழ்தான் விஜய் டிவியில் பங்கு பெற்று வந்தேன். அங்கிருக்கும் எவரும் என்னிடம் இதுவரை எந்த விதமான கேள்வியும் கேட்டது கிடையாது.
நிகழ்ச்சிகளில் எனக்கென்று வசனங்கள் கூட எழுதி தர மாட்டார்கள். நான் எனக்கு தோன்றியதை அதில் பேச சுதந்திரம் இருந்தது. மேலும் எனது சம்பள விவரங்கள் துவங்கி இன்கம் டேக்ஸ் வரை அனைத்தையும் அவர்கள்தான் பார்த்துக்கொண்டனர். அவர்கள் இல்லாமல் நான் இவ்வளவு பிரபலமாகியிருக்க முடியாது.
ஆனால் தற்சமயம் அவர்களுக்கும் விஜய் டிவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மீடியா மெசன்ஸ் சன் டிவிக்கு சென்றுவிட்டனர். அவர்களை விட்டு நான் மட்டும் விஜய் டிவியில் இருந்தால் அது சரியாய் இருக்காது. அதனால்தான் சன் டிவிக்கு வந்தேன். மற்றபடி எனக்கும் விஜய் டிவிக்கும் இடையே எந்த ஒரு விரோதமும் கிடையாது என அவர் கூறியுள்ளார்.
