News
22 வருஷம் கழிச்சி அஜித்தை சந்தித்தப்போது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது!.. வெங்கடேஷ் பட் பகிர்ந்த நிகழ்வு!.
விஜய்யை போலவே அஜித்தும் பல வருடங்களாகவே தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்று வரும் நடிகராக இருந்து வருகிறார். அஜித்திற்கும் பெரும் அளவிலான ரசிக பட்டாளங்கள் உண்டு. அப்படியெல்லாம் இருந்தும் கூட அஜித் மிகவும் சிம்பிளாக இருக்க கூடிய ஆள் என அவரை சுற்றியுள்ள பலரும் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் அவருடன் தன்னுடைய நட்பு குறித்து வெங்கடேஷ் பட் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். 22 வருடங்களுக்கு முன்பு எனக்கும் அஜித் குடும்பத்திற்கும் இடையே நட்பு இருந்து வந்தது. அஜித் மனைவி ஷாலினிக்கு என்னை மிகவும் பிடிக்கும். அஜித்திற்கும் என்னை மிகவும் பிடிக்கும்.

அதற்கு பிறகு நீண்ட நெடுங்காலங்களாக நாங்கள் சந்தித்து கொள்ளவில்லை. 22 வருடங்களுக்கு பிறகு சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் அஜித்தை சந்தித்தேன். அவர் இந்த 22 வருடத்தில் மாறவே இல்லை. என்னை பார்த்தவுடன் கட்டி அணைத்தார் அஜித். அவரது செய்கை எனக்கே அதிர்ச்சியாக இருந்தது.
கண்டிப்பாக வீட்டிற்கு வர வேண்டும் என கேட்டுக்கொண்டார். பொதுவாக பெரும் உச்சத்தை தொடும் நடிகர்கள் இப்படி இருப்பதில்லை. ஆனால் அஜித்தை பொறுத்தவரை தொழில், புகழ் இதெல்லாம் தனி, அவரது தனிப்பட்ட வாழ்க்கை தனி என பிரித்து வைத்துள்ளார்.
அதனால்தான் எந்த ஒரு நபருடனும் அவரால் சகஜமாக பழக முடிகிறது என அவரை குறித்து பேசியுள்ளார் வெங்கடேஷ் பட்.
