Connect with us

இவரு அதுக்கெல்லாம் சரிபட்டு வரமாட்டாரு…!”தல”யிடம் இயக்குனரை போட்டுகொடுத்தவர்கள்…

Cinema History

இவரு அதுக்கெல்லாம் சரிபட்டு வரமாட்டாரு…!”தல”யிடம் இயக்குனரை போட்டுகொடுத்தவர்கள்…

Social Media Bar

Ajith and Venkat prabhu: மங்காத்தா படம் அஜித்தின் திரையுலக பயணத்தில் ஒரு மைல்கல் என்றும் கூட கூறலாம். 2011 ஆம் ஆண்டில் வெளியான இப்படம் அஜித், திரிஷா, அர்ஜீன் மற்றும் பலர் நடித்திருக்க வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகியிருந்தது.

தொழில் போட்டிகளை கடந்து துரோகிகளை நாம் கண்டுகொள்ள வேண்டும் எது வெங்கட் பிரபு விஷயத்தில் உண்மை. அதாவது வெங்கட் பிரபு மங்காத்தா படத்திற்கு முன் “சென்னை-28” கிரிக்கெட் சம்பந்தமான படம் அது மாபெரும் வெற்றி பெற்றது. பின் சரோஜா, கோவா என்று ஓரளவு ஹிட் படங்கள் கொடுத்தார்.

அதற்குப் பிறகு மங்காத்தா படம் தயார் செய்து அஜித்திடம் போய் நின்றார். அஜித் கதை எல்லாம் கேட்டுவிட்டு சரி என்று ஒப்புக்கொள்ள படப்பிடிப்பு தளம் தயாராகிக் கொண்டிருக்கிறது. 

வெங்கட் பிரபுவை பிடிக்காமல் அவரது வளர்ச்சியை பார்த்து பொறாமை கொண்டவர்கள் அவருடனே திரையுலகில் பயணித்தவர்கள் அஜித்திடம் வெங்கட் பிரபு பற்றி தவறான சில கருத்துக்களை கூறியிருக்கிறார்கள்.

அதாவது வெங்கட் பிரபு இதுவரை சீரியசான கதைக்களம் கொண்டு படம் எடுக்கவில்லை, சிறிய வயதினருடன் விளையாட்டாகப் படம் எடுத்துக்கொண்டிருக்கிறார்.

அவரிடன் பணியாற்றியவர்கள் எல்லோரும் விளையாட்டுப் பிள்ளைகள் இவருடன் படம் செய்வது சரியல்ல என்று அஜித்திடம் கூறியிருக்கிறார்கள். ஆனால் அஜித் இப்படிபட்டவர் கூடத்தான் படம் நடிக்க வேண்டும் என்று நடித்து அந்த படம் இன்றும் அஜித் ரசிகர்கள் மட்டுமல்ல மற்ற அனைவராலும் கொண்டாடப்பட்டுவருகிறது.

Articles

parle g
madampatty rangaraj
To Top