News
கார் கழுவுன பையன் கண்முன்ன வளர்ந்து நிக்குறான்!.. புகழ் பற்றி அப்போதே கூறிய வெங்கடேஷ் பட்!..
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர்களில் வெங்கடேஷ் பட்டும் முக்கியமானவர். அதற்கு முன்பு விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் அவர் நடுவராக இருந்துள்ளார். ஆனால் அந்த நிகழ்ச்சிகளில் எல்லாம் அவர் மிகவும் டெரரான நடுவராக இருந்து வந்ததால் அதில் பெரிதாக பிரபலமாகவில்லை.
இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில்தான் மிகவும் காமெடியான ஒரு நடுவராக களம் இறங்கினார். குக் வித் கோமாளியின் நான்கு சீசன்களிலும் இவர்தான் நடுவராக இருந்து வந்தார். ஆனால் தற்சமயம் ஐந்தாவது சீசனில் இருந்து விலகிவிட்டார் வெங்கடேஷ் பட்.
தற்சமயம் சன் டிவியில் ஒளிபரப்பாகும் டாப் குக் டூப் குக் என்னும் நிகழ்ச்சியில் நடுவராக கலந்துக்கொண்டுள்ளார். அவர் ஒரு பேட்டியில் கூறும்போது குக் வித் கோமாளியின் முதல் சீசன் வெளியானப்போது அந்த அளவிற்கு யாரும் பிரபலமாகவில்லை.

ஆனால் இரண்டாவது சீசன் துவங்கியப்போது அதற்கு வரவேற்பு கிடைக்க துவங்கியது. அப்போது புகழுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அப்போது ஒரு நாள் அவனை அழைத்து ஒரு நாள் நீ பெரிய ஆளாக வரணும். அப்போ நான் போன் பண்ணுனா கூட கால்ஷூட் கொடுக்க உனக்கு டைம் இருக்க கூடாது என கூறினேன்.
அதே போல குக் வித் கோமாளி சீசன் 3 ஆரம்பித்தப்போது புகழ் அதில் கலந்துக்கொள்ளவில்லை. அந்த சமயத்தில் எக்கச்சக்க படத்தில் கமிட்டாகி பிஸியாகி விட்டான் புகழ். அதன் பிறகு வலுக்கட்டாயமாக பேசி அவனை சீசன் நான்கில் மீண்டும் கொண்டு வந்தோம்.
ஒரு காலத்தில் கார் கழுவின பையன், லேத்து பட்டறையில் வேலை பார்த்தவன் கண்முன்னே வளர்ந்து நிக்கிறது பெரிமிதமா இருக்கு. என்று புகழ் குறித்து கூறுகிறார் வெங்கடேஷ் பட்.
