Cinema History
உங்க வாழ்க்கை நான் சொல்றப்படிதான் நடக்கும்!.. கட்டம் கட்டி கூறிய வெண்ணிற ஆடை மூர்த்தி!.. அதிர்ச்சியடைந்த ரஜினிகாந்த்!.
Rajinikanth: சினிமாவில் டாப் லெவலில் இருக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வாய்ப்பு தேடி வந்து பெரிதாக தமிழ் பேசக்கூட தெரியாவிட்டாலும் கூட மக்கள் மத்தியில் பிரபலமானார் ரஜினிகாந்த்.
இப்போது கூட அவருக்கு அவ்வளவாக தமிழ் சரளமாக பேச வராது. ஆனாலும் மக்கள் மனதில் சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்தப்போது மிகவும் கஷ்டப்பட்டார் ரஜினிகாந்த். கன்னட நடிகர் ராஜ்குமாரை பார்த்து அவரை போலவே கதாநாயகனாக வேண்டும் என்று ஆசைப்பட்டுதான் சினிமாவில் வாய்ப்பு தேடி வந்தார் ரஜினிகாந்த்.

ராஜ்குமார் தீவிரமான ராகவேந்திரரனின் பக்தர் ஆவார். அவரது ரசிகராக இருந்ததால் ரஜினிகாந்தும் ராகவேந்திரரை வணங்கினார். ஆரம்பக்கட்டத்தில் ரஜினிகாந்த் சினிமாவில் வாய்ப்பு தேடி கொண்டிருந்தப்போது அவருக்கு நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தியோடு பழகுவதற்கு வாய்ப்பு கிடைத்தது.
வெண்ணிற ஆடை மூர்த்தி எழுதிய ஜாதகம்:
அப்போது வெண்ணிற ஆடை மூர்த்தி ஏற்கனவே பிரபலமான காமெடி நடிகராக இருந்தார். ரஜினிகாந்த் எப்போதும் ராகவேந்திரரை கும்பிடுவதை பார்த்த வெண்ணிற ஆடை மூர்த்தி ஒருமுறை இது என்ன புது சாமியாக இருக்கிறதே எப்போதும் இதையே வணங்குகிறீர்களே என கேட்டப்போது இது ராகவேந்திரா சாமி ரொம்பவும் சக்தியான சாமி என கூறியுள்ளார் ரஜினி.
அதற்கு பிறகு வெண்ணிற ஆடை மூர்த்தியும் ராகவேந்திரரை வணங்கி வந்தார். வெண்ணிற ஆடை மூர்த்திக்கு ஜாதகம் எழுத தெரியும். ரஜினிகாந்த் அவருக்கு ஜாதகமே எழுதாமல் இருந்தார். இந்த நிலையில் பிறந்த நேரத்தை வெண்ணிற ஆடை மூர்த்தியிடம் கொடுத்து ஜாதகம் எழுதி கேட்டார் ரஜினி.

வெண்ணிற ஆடை மூர்த்தியும் எழுதி கொடுத்தார். அப்போது ரஜினி இந்தியா முழுவதும் நான் அனைத்து மொழிகளிலும் படம் நடிப்பேனா? என ஜாதகத்தில் பார்த்து சொல்லும்படி கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த வெண்ணிற ஆடை மூர்த்தி உங்களுக்கு மற்ற மொழிகளில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காது. ஆனால் தமிழில் பெரும் உச்சத்தை தொடுவீர்கள் என கூறியுள்ளார் வெண்ணிற ஆடை மூர்த்தி.
பிறகு அது அப்படியே நடந்தது என வெண்ணிற ஆடை மூர்த்தி தனது பேட்டியில் கூறியுள்ளார்.
