Connect with us

தனுஷை வச்சி அந்த க்ளைமேக்ஸ் வச்சுதுக்காக வருத்தப்படுறேன்!.. மனம் திறந்த வெற்றிமாறன்!.

dhanush vetrimaaran

Cinema History

தனுஷை வச்சி அந்த க்ளைமேக்ஸ் வச்சுதுக்காக வருத்தப்படுறேன்!.. மனம் திறந்த வெற்றிமாறன்!.

Social Media Bar

பொல்லாதவன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். முதல் படத்தில் துவங்கி இதுவரை வெற்றிமாறன் இயக்கிய படங்கள் யாவும் வெற்றி படங்களாகதான் அமைந்துள்ளன.

பொல்லாதவன் திரைப்படத்தில் துவங்கி வெற்றிமாறன் இயக்கிய பெரும்பாலான திரைப்படங்களில் நடிகர் தனுஷ்தான் கதாநாயகனாக நடித்தார். அந்த அளவிற்கு தனுஷிற்கும் வெற்றிமாறனுக்கும் இடையே நட்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் ஒரு பேட்டியில் வெற்றிமாறனிடம் நீங்கள் இயக்கிய திரைப்படங்களில் உங்களுக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் பிடித்த படம் என எதை கூறுவீர்கள் என கேட்டப்போது விசாரனை மற்றும் ஆடுகளம் இரண்டு திரைப்படங்கள்தான் எனக்கு ரொம்ப பிடித்த படம்.

vetrimaaran
vetrimaaran

ஆனால் இப்போது வரை ஆடுகளம் திரைப்படத்தின் க்ளைமேக்ஸை பலரும் விரும்பவில்லை. எப்படி படத்தின் இடைவேளையில் கெத்தான காட்சி இருந்ததோ அதே போல க்ளைமேக்ஸுலும் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என மக்கள் நினைத்தனர்.

மேலும் அந்த க்ளைமேக்ஸை ஓப்பன் க்ளைமேக்ஸாக வைத்தது பலருக்கும் புரியவில்லை. சிலர் பெயர் ஓடும்போதும் பாக்கி கதை வரும் என காத்திருந்தனர். இன்னும் சிலர் படத்தின் இரண்டாம் பாகம் வரும் என நினைத்தனர்.

ஆடுகளம் திரைப்படத்தின் இறுதி காட்சிகள் குறித்து இப்போது வருத்தப்படுகிறேன். நான் அதை மாற்றி அமைத்திருக்க வேண்டும் என்கிறார் வெற்றிமாறன்.

To Top