நெசமாவே இப்படிதான் பொல்லாதவன் கதை எழுதுனீங்களா?.. வெற்றிமாறன் பதிலை கேட்டு ஆடிப்போன பிரபலம்.. இவர் வேற லெவலு..!
தமிழில் வித்தியாசமான திரைப்படங்களை எடுக்கும் முக்கியமான இயக்குனர்களில் வெற்றிமாறனும் ஒருவர். வெற்றிமாறன் இயக்கும்போது திரைப்படத்திலும் கமர்சியலான கதைகளை தாண்டி அரசியல் ரீதியாக படத்தில் சில விஷயங்களை பேசி இருப்பார்.
அதனாலயே வெற்றிமாறன் திரைப்படங்கள் தனித்துவமானதாக இருக்கின்றன. வெற்றிமாறனின் முதல் திரைப்படம் பொல்லாதவன் திரைப்படம் ஆகும். பொல்லாதவன் திரைப்படத்தில்தான் மிக விரிவாக சென்னையில் நடக்கும் இருசக்கர வாகனங்கள் திருட்டு குறித்து பேசி இருப்பார்.
இந்த திரைப்படத்தின் கதை எப்படி உருவானது என்று ஒரு பேட்டியில் பேசியிருந்தார் வெற்றிமாறன். அது அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுக்கும் வகையில் இருந்தது.
பொல்லாதவன் கதை:
பொதுவாகவே கதைகள் என்பது ஒரு வரியில் இருந்துதான் துவங்கும். அப்படியாக தனக்கு துவங்கிய ஒரு சின்ன கதைதான் பொல்லாதவன் என்று கூறுகிறார் வெற்றிமாறன். ஒரு கதாநாயகன் அவனைவிட அதிக வலிமை கொண்ட ஒரு ரவுடியை அடிக்கிறான் என்பது மட்டும்தான் எனக்கு தோன்றிய கதையாக இருக்கிறது.
பிறகு நேரடியாக எப்படி அப்படி ஒரு ரவுடியை அடிக்க முடியும் எனவே ரவுடியின் தம்பியை அடிப்பதாக கதையை வைத்துக் கொள்வோம் என்று சின்னதாக எழுத ஆரம்பித்து மொத்த பொல்லாதவன் திரைப்படத்தின் கதையையும் எழுதினேன்.
பிறகு பொல்லாதவன் திரைப்படத்தை முடித்த பிறகு அந்த அண்ணன் கதாபாத்திரத்திற்கு தனியான ஒரு கதையை செய்ய வேண்டும் என்று நினைத்தேன் அதுதான் வடசென்னை திரைப்படத்தில் வரும் ராஜன் கதாபாத்திரம் என்று கூறியிருக்கிறார் வெற்றிமாறன்.