அன்னிக்கி தப்பு பண்ணுனப்பையும் எங்கப்பா சொன்ன அந்த வார்த்தை!.. மனம் நெகிழ்ந்த வெற்றிமாறன்!..

தமிழில் அரசியல் பேசி படம் இயக்கும் ஒரு சில இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் வெற்றிமாறன். அவரது முதல் படமான பொல்லாதவன் திரைப்படத்தில் துவங்கி அவர் இயக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் பெரிதாக ஏதாவது ஒரு விஷயத்தை பேசியிருப்பார்.

உதாரணத்திற்கு பொல்லாதவன் திரைப்படத்தில் சென்னையில் நடக்கும் பைக் திருட்டு தொடர்பாக பல விஷயங்களை மிக நுணுக்கமாக பேசி இருப்பார். அதே போல ஆடுகளம் திரைப்படத்திலும் சேவல் சண்டை குறித்து அதிக தகவல்களை அளித்திருப்பார்.

சிறு வயது முதலே பல்வேறு தவறுகளை செய்துதான் தன்னை திருத்திக்கொண்டதாக வெற்றி மாறன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். பொல்லாதவன் திரைப்படத்தில் வைக்கப்பட்ட பல காமெடிகள் குறித்து பிறகு வருத்தப்பட்டார் வெற்றிமாறன்.

vetrimaaran
vetrimaaran
Social Media Bar

இந்த நிலையில் அவருக்கு சிறுவயதில் நடந்த நிகழ்வு ஒன்றை ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார். சிறு வயதாக இருக்கும்போது வெற்றிமாறனுக்கு அவ்வளவாக படிப்பு வராது. அப்போது ஒருமுறை தேர்வு எழுதும்போது அருகில் இருக்கும் பையனை பார்த்து அவர் தேர்வை எழுதியுள்ளார்.

இதனை பார்த்த ஆசிரியர் வெற்றிமாறனின் தாயை அழைத்து இதுக்குறித்து பேசியுள்ளனர். இந்த நிலையில் வீட்டில் இருப்பவர்களிடம் வாத்தியார் தன்னை தவறாக பிடித்துவிட்டதாக கூறி ஏமாற்றிவிட்டார் வெற்றிமாறன். அதற்கு பிறகு இரவில்தான அவரது தந்தை வீட்டிற்கு வந்தார்.

அவர் விஷயத்தை கேள்விப்பட்டதும் வெற்றிமாறனை அழைத்தார். நீ பள்ளிக்கு தேர்ச்சி பெறுவதற்காக செல்லவில்லை. கற்றுக்கொள்வதற்காகதான் பள்ளிக்கு செல்கிறாய். நீ கற்காத ஒரு விஷயத்தை எழுதி தேர்வில் தேர்ச்சியடைய வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார்.

அது என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத வார்த்தையாக அமைந்தது என்கிறார் வெற்றிமாறன்.