Connect with us

விஜய்க்காக நான் ஒரு கதை சொல்லியிருக்கேன்!.. தளபதி 69 அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்!..

vijay vetrimaaran

News

விஜய்க்காக நான் ஒரு கதை சொல்லியிருக்கேன்!.. தளபதி 69 அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்!..

Social Media Bar

அரசியலுக்கு வந்த பிறகு இனி சினிமாவில் நடிக்க போவதில்லை என்று அறிவித்துள்ளார் விஜய். இதனால் விஜய் ரசிகர்கள் பலரும் கோட் திரைப்படத்திற்கு பிறகு விஜய் நடிக்கப்போகும் திரைப்படம் குறித்து அதிக ஆவல் காட்டி வருகின்றனர்.

கோட் திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். அதனை தொடர்ந்து அடுத்து வரும் திரைப்படம்தான் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் இறுதி படமாக இருக்கும். அதற்கு பிறகு விஜய் சினிமாவில் நடிக்க போவதில்லை என்று பேச்சுக்கள் இருக்கின்றன.

அதே சமயம் இந்த கடைசி படம் அரசியல் பேசும் படமாக இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறாராம் விஜய். எனவே படங்களில் அரசியல் பேசும் வெற்றிமாறன் போன்ற ஆட்கள் விஜய்யை வைத்து திரைப்படம் இயக்கினால் சிறப்பாக இருக்கும் என்று பேச்சுக்கள் இருந்தன.

vetrimaaran
vetrimaaran

இதுக்குறித்து ஒரு நேர்க்காணலில் பேசிய வெற்றிமாறன் விஜய் சார்க்கு வெகு நாட்களுக்கு முன்பே ஒரு கதை கூறினேன். ஆனால் அவர் அந்த கதையை படமாக்குவது குறித்து இப்போது வரை எந்த ஒரு பதிலும் கூறவில்லை. எனவே அதன் படப்பிடிப்பு துவங்கும் என எனக்கு தோன்றவில்லை என கூறியுள்ளார்.

இதை வைத்து பார்க்கும்போது அடுத்து விஜய் நடிக்கும் திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கவில்லை என்பது திட்டவட்டமாக தெரிகிறது.

To Top