Cinema History
இளையராஜா கேட்ட அந்த நாலு வார்த்தை!.. அப்படியே ஆடி போயிட்டேன்!.. மனம் திறந்த வெற்றிமாறன்!..
Director Vetrimaaran: தமிழில் வித்தியாசமான திரைப்படங்களை இயக்கும் ஒரு சில இயக்குனர்களில் வெற்றிமாறனும் முக்கியமானவர். தன்னுடைய முதல் திரைப்படமான பொல்லாதவன் திரைப்படத்திலேயே சென்னையில் நடக்கும் இருசக்கர வாகன திருட்டு குறித்து பல விஷயங்களை பேசி இருப்பார் வெற்றிமாறன்.
வெற்றிமாறன் ஒவ்வொரு திரைப்படங்களை இயக்கும்போதும் அந்த திரைப்படம் தொடர்பாக எக்கச்சக்கமான ஆய்வுகளை செய்வார். அவற்றின் பிரதிபலனாக திரைப்படங்களில் மிக நுட்பமாக அவற்றை சேர்த்திருப்பார். அதற்குப் பிறகு இயக்கிய ஆடுகளம் திரைப்படத்தில் அதே போல சேவல் சண்டை தொடர்பாக விஷயங்களை பேசி இருப்பார் வெற்றிமாறன்.
இப்படி அவரது திரைப்படங்களில் தொடர்ந்து ஒரு திரைப்படம் என்பதையும் தாண்டி சில விஷயங்களை பேசக்கூடியவர். இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு தற்சமயம் படமாக்கப்பட இருக்கிறது. அதில் தனுஷ் தான் கதாநாயகனாக நடிக்கிறார்.
இந்த திரைப்படத்தின் துவக்க விழா நடந்த பொழுது அதில் கலந்து கொண்ட வெற்றிமாறன் இளையராஜா குறித்து ஒரு சில வார்த்தைகளை பகிர்ந்து இருந்தார். விடுதலை திரைப்படத்திற்கு இளையராஜாதான் இசையமைத்திருந்தார்.
எனவே திரைப்படம் முழுமை அடைந்த பிறகு அந்த திரைப்படத்தை ஒரு முறை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் இளையராஜா. அப்பொழுது வெற்றி மாறன் அவருக்கு போட்டு காட்டிய பொழுது உங்களுக்கு பிரச்சனை இல்லை என்றால் இதில் எனக்கு சில நெருடலான விஷயங்கள் இருக்கு அவற்றை கூறலாமா என்று கேட்டிருக்கிறார் இளையராஜா.
சினிமாவில் எவ்வளவு மூத்தவர் இளையராஜா. இருந்தாலும் கூட இப்படி நம்மிடம் அனுமதி கேட்கிறாரே என்று யோசித்த வெற்றிமாறன் சொல்லுங்கள் ஐயா என்று கேட்கவும் படத்தை குறித்து நான்கு வரிகள் பேசியவர் பாதியிலேயே நிறுத்தி சரியாகத்தான் சொல்கிறேனா அல்லது இதோடு நிறுத்திக் கொள்ளவா என்று கேட்டிருக்கிறார்.
இல்லை ஐயா நீங்கள் சொல்வது சரியாகத்தான் இருக்கிறது என்று வெற்றிமாறன் கூறிய பிறகு தன்னுடைய கருத்தை முழுமையாக முன் வைத்திருக்கிறார் இளையராஜா. என்னதான் பெரும் இசையமைப்பாளராக இருந்தாலும் இயக்குநருக்கு கொடுக்கும் மரியாதையை அப்படியே தவறாமல் கொடுக்கக்கூடியவர் இளையராஜா என்று கூறியிருக்கிறார் வெற்றிமாறன்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்