Connect with us

வேட்டையன் ல பண்ணுன அந்த விஷயத்தை தவறவிட்டுட்டீங்க.. கங்குவா சொதப்புவதற்கு இதுவும் ஒரு காரணம்.!

surya rajini

Tamil Cinema News

வேட்டையன் ல பண்ணுன அந்த விஷயத்தை தவறவிட்டுட்டீங்க.. கங்குவா சொதப்புவதற்கு இதுவும் ஒரு காரணம்.!

kanguva is a movie directed by Siruthai Siva starring actor Surya. kanguva movie created high expectations among people. But the movie did not live up to that expectation on the first day of its release. Due to this, negative reviews are coming about the film.

திரைப்படங்களைப் பொறுத்தவரை எப்பொழுதுமே அதற்கு அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கக் கூடாது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக கங்குவா திரைப்படம் அமைந்து இருக்கிறது.

ஏனெனில் ஒரு திரைப்படம் குறித்து எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்கள் திரையரங்கிற்கு வரும் பொழுது சின்ன சின்ன விஷயங்கள் கூட அவர்களுக்கு பெரிய ஆவலை ஏற்படுத்திக் கொடுக்கும். ஆனால் அவர்கள் பெரிதாக எதிர்பார்த்து வரும் பொழுது அந்த விஷயங்கள் எல்லாம் அவர்களுக்கு பெரிதாக ஒரு ஆச்சரியத்தை கொடுக்காது.

வேட்டையன் செய்த வேலை:

இதனால்தான் கங்குவா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதற்கு முன்பு ரஜினி நடித்த வேட்டையன் திரைப்படம் வெளியான பொழுது இயக்குனர் மிகத் தெளிவாக ஒரு விஷயத்தை செய்திருந்தார்.

வேட்டையன் திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியதிலிருந்து அந்த படம் குறித்து பெரிதாக அப்டேட் என்று எதுவுமே வரவில்லை. அதனால் படம் குறித்து மக்களுக்கும் பெரிதாக எதிர்பார்ப்பு இல்லை. இன்னும் சொல்லப்போனால் பலருக்கும் வேட்டையன் என்கிற ஒரு திரைப்படம் வருவதே தெரியாமல் இருந்தது.

ஆனால் மனசிலாயோ என்கிற பாடல் வெளியான பொழுது வேட்டையன் திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு என்பது அப்பொழுதுதான் அதிகரிக்க துவங்கியது. இந்த நிலையில் படத்தின் டிரைலர் வெளியாகி சில நாட்களிலேயே படம் திரைக்கு வந்தது.

கங்குவா செய்த தவறு:

இதனால் அதிகமாக எதிர்பார்ப்பு என்பது மக்களுக்கு இல்லை எனவே வேட்டையன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் கங்குவா திரைப்படத்தை பொறுத்தவரை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் சரி சூர்யாவும் சரி படம் குறித்து மக்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டனர்.

இதனால் அந்த படத்தை பார்க்க வந்த மக்கள் எடுக்கப்பட்ட படத்தை தாண்டி ஒரு விஷயத்தை எதிர்பார்த்து படத்திற்கு வந்து விட்டனர் அது படத்தில் கிடைக்கவில்லை எனும் பொழுது படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வர துவங்கி விட்டன. இது குறித்து சினிமா தொடர்பான ஆட்கள் கூறும் பொழுது படத்தின் பல விஷயங்களை ரகசியமாக வைத்து படத்தை வெளியிட்டிருக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE

தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்

Bigg Boss Update

shruthika
biggboss
soundarya
vijay sethupathi darsha gupta
anshita
biggboss
To Top