குச்சி கொளுத்தி போட மாயா போட்ட ப்ளான்… உஷாராக எஸ்கேப் ஆன விசித்ரா!.. பலே ஆளுதான்.

Vichitra in Bigboss Tamil: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரு வாரங்களாக அதிகமாக பேசு பொருளாகி வருகிறார் மாயா. மாயா கேப்டனாக ஆனதில் இருந்தே பிக்பாஸ் வீடு பரபரப்பாக சென்று கொண்டுள்ளது. கேப்டன் ஆனதும் மாயா செய்த அட்ராசிட்டியாலேயே அவர் மிகவும் பிரபலமடைந்தார்.

பொதுவாக கேப்டன் ஆனவர்கள் போட்டியாளர்களிடம் பொதுவாக நடந்துக்கொள்வார்கள். ஆனால் மாயா ஓரவஞ்சனையாக நடந்துக்கொண்டார். அதனை தொடர்ந்து போன வாரம் முழுக்க ஒரே சண்டையாக நடந்தது.

vichitra
vichitra
Social Media Bar

இதனால் மக்கள் மத்தியில் விசித்திரா மற்றும் அர்ச்சனா மீது அதிக வரவேற்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அந்த கூட்டணியை கலைப்பதற்கான வேலையை பார்த்து வருகிறார் மாயா. மேலும் விசித்திரா குறித்து போட்டியாளர்கள் சிலர் மத்தியிலும் நல்ல மதிப்பு இருக்கிறது.

எனவே விசித்திராவிடம் சென்ற மாயா இந்த வீட்டில் கவனம் ஈர்க்காத போட்டியாளர் யார் என்று நினைக்கிறீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த விசித்திரா எனக்கு யார் மீதும் அப்படி ஒரு எண்ணம் இல்லை என கூறிவிட்டார்.

ஒருவேளை விசித்திரா யார் பேரையாவது கூறியிருந்தால் அந்த நபரிடம் சென்று கொளுத்தி போட ப்ளான் செய்தார் மாயா என்று விசித்திரா பின்னர் பேசியிருக்கிறார். எனவே உஷாராக எஸ்கேப் ஆகியுள்ளார் விசித்திரா.