Tamil Cinema News
அந்த சிக்கல் தீருற வரைக்கும் விடாமுயற்சி ரிலீஸ் கஷ்டம்தான்.. ரசிகர்களுக்கு பேரிடியாக விழுந்த சம்பவம்..!
அஜித் ரசிகர்கள் மட்டும் பல காலங்களாக தொடர்ந்து தல படத்தின் அப்டேட் வேண்டும் என்று காத்துக்கொண்டிருப்பது நிகழ்ந்துக்கொண்டே இருக்கிறது. இதே மாதிரியான விஷயம் வலிமை படத்தின்போது நடந்ததையும் பலரும் அறிவர்.
இந்த நிலையில் அதே மாதிரியான பஞ்சாயத்துதான் இப்போது விடாமுயற்சி படத்திற்கும் நடந்துள்ளது. அஜித் நடிப்பில் உருவான விடாமுயற்சி திரைப்படம் எப்போது வெளியாகும் என்பது கேள்விக்குறியாகவே இருந்தது. படம் பொங்கலுக்கு வெளியாகும் என பலரும் காத்திருந்தனர்.
ஆனால் இந்த படம் பொங்கலுக்கு வெளியாகவில்லை. இந்த நிலையில் நேற்று படத்தின் ட்ரைலர் வெளியானது. படம் வருகிற பிப்ரவரி 6 அன்று வெளியாகும் என தற்சமயம் அறிவிக்கப்பட்டுள்ளது. விடாமுயற்சி திரைப்படமானது ஹாலிவுட்டில் வெளியான பிரேக் டவுன் என்கிற திரைப்படத்தின் கதையை அடிப்படையாக கொண்டு அமைந்துள்ளது.
ஆனால் அதற்கான காப்புரிமையை இவர்கள் பாராமௌண்ட் பிக்சர்ஸ் என்னும் நிறுவனத்திடம் வாங்காமல் விட்டுவிட்டனர். எனவே இந்த பிரச்சனை தீரும் வரையில் படம் வெளியாவதில் சிக்கல்கள் இருக்கும் என ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன.