Tamil Cinema News
எல்.ஐ.கே படத்தின் கதை இதுதான்.. லீக் செய்த சினிமா தளம்.. ஆடிப்போன படக்குழு.!
நடிகை நயன்தாராவின் கணவரான இயக்குனர் விக்னேஷ் சிவன் தொடர்ந்து தமிழ் சினிமாவில் காதல் திரைப்படங்களாக இயக்கி வருகிறார். இவர் இயக்கிய திரைப்படங்களில் நானும் ரவுடிதான், காத்து வாக்குல ரெண்டு காதல் மாதிரியான ஒரு சில திரைப்படங்கள் அதிக வரவேற்பையும் பெற்றுள்ளன.
இந்த நிலையில் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திற்கு பிறகு தற்சமயம் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் திரைப்படம் எல்.ஐ.கே. இந்த திரைப்படத்தில் வெற்றி நாயகன் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கிறார். படத்தில் கதாநாயகியாக நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.
மேலும் நடிகர் சீமான் தான் கதாநாயகனுக்கு அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்று கொண்டுள்ளன. இந்த வருட இறுதிக்குள் படம் திரையரங்கிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டைம் ட்ராவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் எல்.ஐ.கே படத்தின் கதையை முன்பே எழுதிவிட்டார் விக்னேஷ் சிவன். ஆனால் பட்ஜெட் காரணமாக அந்த கதை படமாக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் தற்சமயம் அந்த கதை படமாக்கப்பட்டு வருகிறது.
இந்த படத்தின் கதை குறித்து ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. பிரபல சர்வேதேச திரைப்பட தளமான ஐ.எம்.டி.பி இந்த படத்தின் ஒன் லைனை வெளியிட்டுள்ளது. அதாவது கதாநாயகன் காதலுக்காக 10 வருடம் எதிர்காலத்தை நோக்கி பயணிப்பதுதான் கதை என ஐ.எம்.டி.பியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக வெளியாகாத திரைப்படத்தின் ஒன்லைனை இந்த தளம் வெளியிடுவதில்லை. அப்படியிருக்கும்போது இந்த தகவல் எப்படி அதில் வெளியானது என்பதுதான் இப்போது கேள்வியாகி வருகிறது.
