Connect with us

பணத்தாசையில் விக்கி நயன் செய்த வேலை.. ஆப்படித்த நடிகர் தனுஷ்… விவரமான ஆள்கிட்ட வச்சிக்காதீங்க..!

vignesh shivan dhanush

Tamil Cinema News

பணத்தாசையில் விக்கி நயன் செய்த வேலை.. ஆப்படித்த நடிகர் தனுஷ்… விவரமான ஆள்கிட்ட வச்சிக்காதீங்க..!

Social Media Bar

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் முக்கிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை நயன்தாரா. இன்னமுமே மார்க்கெட் குறையாமல் தொடர்ந்து நயன்தாரா நடித்து வருகிறார். இந்த நிலையில் நயன்தாராவிற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

அவர் திருமணம் நடந்த பொழுது அது குறித்த வீடியோக்கள் எதுவுமே சமூக வலைதளங்களில் வெளியாகவில்லை. அதற்கு முக்கிய காரணம் இவர்களது திருமண வீடியோவை மொத்தமாக வெளியிடுகிறேன் என்று netflix அதற்கு ஒரு அக்ரீமெண்ட் போட்டு கோடிக்கணக்கான ரூபாயையும் நயன்தாராவிற்கும் விக்னேஷ் சிவனுக்கும் கொடுத்து இருந்தது.

அதனால் செல்போனுக்கு கூட நயன்தாராவின் திருமணத்தில் அனுமதி வழங்கவில்லை. இந்த நிலையில் இந்த வீடியோ வெகு காலங்களாகவே நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகாமல் இருந்து வந்தது. சமீபத்தில் தான் இதை வெளியிடப் போவதாக அறிவித்திருந்தது Netflix.

அடுத்து வந்த பிரச்சனை:

இதற்கு நடுவே இதில் தற்சமயம் தனுஷால் பிரச்சனை வர துவங்கியிருக்கிறது தனுஷ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய திரைப்படம் நானும் ரவுடிதான். இந்த திரைப்படத்தில் நடிக்கும் பொழுதுதான் நயன்தாராவிருக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

எனவே இந்த திரைப்படத்தில் உள்ள நிறைய காட்சிகளை இந்த திருமண வீடியோவில் பயன்படுத்தியிருக்கின்றனர். மேலும் அந்த படத்தில் எடுக்கப்பட்டு வைக்கப்படாத காட்சிகளை கூட இந்த வீடியோவில் பயன்படுத்தி இருக்கின்றனர்.

ஆனால் இந்த வீடியோக்களுக்கு ஓனர் தனுஷ் தான் தனுஷிடம் எந்த அனுமதியும் வாங்காமல் இவர்கள் இந்த வீடியோவை வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் இப்பொழுது தனுஷிடம் அனுமதி கேட்டிருக்கின்றனர் ஆனால் அவர் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் இந்த வீடியோ வருவதில் இன்னும் தாமதம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

To Top