Tamil Cinema News
நான் எந்த பொய்யும் சொல்லல.. ரசிகர்கள் செய்த செய்கையால் மன வருத்தத்தில் பதிலளித்த விக்னேஷ் சிவன்.!
சமீப காலமாகவே இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் அவரது மனைவியாக நயன்தாரா ஆகிய இருவரும் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் ஒரு சூழல் ஏற்பட்டு வருகிறது.
நடிகை நயன்தாரா மூலமாகவே தமிழ் சினிமாவில் பிரபலமடைந்தவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். அவர் இயக்கிய திரைப்படங்களை விடவும் அவர் நயன்தாராவை காதலித்த பிறகுதான் அவருக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தது.
மக்கள் மத்தியில் இப்பொழுது பிரபலமான இயக்குனராக விக்னேஷ் சிவன் இருந்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் தனுஷுக்கும் நயன்தாராவிற்கும் பிரச்சனை ஏற்பட்டதிலிருந்து நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியினர் குறித்து நிறைய சர்ச்சைகள் சினிமாவில் வலம் வரத் துவங்கியிருந்தன.
விக்னேஷ் சிவன் பதில்:
இந்த நிலையில் ஒரு பேட்டியில் விக்னேஷ் வரன் பேசும் பொழுது என்னை அறிந்தால் திரைப்படத்தின் போது அவர் அஜித்தை சந்தித்ததாகவும் அப்பொழுது அஜித் நான் ரவுடிதான் திரைப்படத்தை பார்த்தேன் அது நன்றாக இருந்தது என கூறியதாகவும் கூறியிருந்தார்.
ஆனால் இதை பார்த்த ரசிகர்கள் என்னை அறிந்தால் படம் ரிலீஸ் ஆன சமயத்தில் நானும் ரவுடிதான் திரைப்படம் திரைக்கு வரவே இல்லை அப்புறம் எப்படி அதை அஜித் பார்த்திருப்பார் என்று கேள்வி எழுப்பி வந்தனர். மேலும் இது குறித்து விக்னேஷ் சிவனை கடுமையாக விமர்சித்து வந்தனர்.
தற்சமயம் இதற்கு பதில் அளித்து இருக்கிறார் விக்னேஷ் சிவன். இது குறித்து விக்னேஷ் சிவன் கூறும் பொழுது விசுவாசம் திரைப்படத்தின் பொழுது தான் அஜித் என்னிடம் படம் நன்றாக இருப்பதாக கூறினார். அதை நான் விலாவாரியாக அங்கு கூறவில்லை ஏனெனில் நிறைய இயக்குனர்கள் அங்கு வந்திருந்தனர். அதனால் சுருக்கமாக நான் அதை கூறினேன் அதை மக்கள் தவறாக புரிந்து கொண்டனர் என்று விளக்கம் அளித்து இருகிறார் விக்னேஷ் சிவன்.
