Tamil Cinema News
அமரன் படம் பார்த்தேன்.. என்ன ஒரு அவமானம்.. மனம் நொந்துப்போன விக்னேஷ் சிவன்..!
Recently released movie Amaran starring Sivakarthikeyan. Director Vignesh Shivan has said that some of the scenes in the film made him very sad and worried.
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வருகிறது, சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம். இதற்கு முன்பு ஏற்கனவே டாக்டர் மற்றும் டான் ஆகிய இரண்டு திரைப்படங்களில் 100 கோடிக்கும் அதிகமான வசூல் சாதனை கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
ஆனாலும் அதையெல்லாம் தாண்டி வெறும் 3 நாட்களில் 100 கோடியை தாண்டி வசூல் சாதனை கொடுத்திருக்கிறது அமரன் திரைப்படம். இந்த படத்தின் மொத்த பட்ஜெட்டே 130 கோடி தான் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் படத்தின் பட்ஜெட்டை மூன்றே நாட்களில் பெற்று இருக்கிறது அமரன் திரைப்படம். இது சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய வெற்றியாகும். அதே சமயம் ஒரு ராணுவ வீரரின் நிஜ வாழ்க்கையை மக்கள் மத்தியில் இந்த அளவிற்கு கொண்டு சென்றதில் தயாரிப்பாளரான கமல்ஹாசனுக்கும் முக்கியமான பங்கு இருக்கிறது.
விக்னேஷ் சிவன் பதில்:
இந்நிலையில் இந்த திரைப்படத்தை பார்த்த நடிகை நயன்தாராவின் கணவரும் தமிழ் திரைப்பட இயக்குனருமான விக்னேஷ் சிவன் சில கருத்துக்களை கூறியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது படத்தில் ஒரு காட்சியில் நிலம் வாங்குவதற்கு பணம் இல்லாமல் நகருக்கு வெளியே முகுந்த் வரதராஜ் நிலம் வாங்குவது போன்ற காட்சி இருந்தது.
அதை பார்க்கும் பொழுதே எனக்கு மிகவும் அவமானமாக இருந்தது நாட்டை காப்பாற்றுவதற்காக உயிரைவிடும் ஒரு வீரருக்கு நிலம் வாங்க கூட காசு இல்லை என்பது எவ்வளவு மோசமான விஷயம். அவர்கள் எக்க சக்கமாக சம்பாதிப்பவர்களாக தானே இருக்க வேண்டும்.
ஒருவேளை அப்படியான ஒரு முயற்சி இங்கு எடுக்கப்பட்டால் அதற்கு முதலில் உதவும் நபராக நான்தான் இருப்பேன் என்று கூறியிருக்கிறார் விக்னேஷ் சிவன்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்