Connect with us

எங்களுக்கும் ஆள் இருக்கு… நயன் செம்பருத்தி டீ பிரச்சனையில் உள்ளே பிரமுகரை கொண்டு வந்த விக்கி!..

nayanthara vikki

News

எங்களுக்கும் ஆள் இருக்கு… நயன் செம்பருத்தி டீ பிரச்சனையில் உள்ளே பிரமுகரை கொண்டு வந்த விக்கி!..

Social Media Bar

தற்பொழுது சினிமாவில் சர்ச்சைகளுக்கும், வதந்திகளுக்கும் பஞ்சம் இருக்காது. அந்த வகையில் எப்பொழுதும் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு நடிகை என்றால் அது நயன்தாரா தான். காரணம் இவரின் படத்தை குறித்த அப்டேட் வருகிறதோ, இல்லையோ ஆனால் நயன்தாரா புதிதாக தொடங்கும் பிசினஸ் மற்றும் இவரை குறித்த சர்ச்சைகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டு தான் இருக்கிறது.

தற்பொழுது இவரை பற்றிய சர்ச்சை ஒன்று சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது. அதற்கு காரணம் அவர் சமீபத்தில் பதிவிட்ட செம்பருத்திப்பூ டீ பற்றி இணையதளத்தில் பதிவிட்டிருந்தார்.

செம்பருத்திப்பூ டீ சர்ச்சை

நடிகை நயன்தாரா செம்பருத்திப்பூ டீ நான் தினமும் குடித்து வருகிறேன். இந்த செம்பருத்தி டீ குடிப்பதால் உடலில் உள்ள கொழுப்புகள் கரைந்து உடல் பருமன் குறையும் எனவும், மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதனை பரிந்துரைக்கலாம் எனவும், இது உடலுக்கு நன்மை தரக்கூடிய டீ எனவும் செம்பருத்திப்பூ ஆயுர்வேதத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது எனவும் அவர் கூறியிருந்தார்.

மேலும் இந்த செம்பருத்திப் பூவை நான் Munmun Ganeriwal மருத்துவரின் ஆலோசனையின் பேரில் நான் குடித்து வருகிறேன் என அவர் கூறியிருந்தார்.

இதனைப் பார்த்த மருத்துவர் ஒருவர் செம்பருத்திப்பூ டீ குடிப்பதோடு நயன்தாரா நிறுத்திக் கொள்ள வேண்டும். இதுபோல தவறான பதிவுகளை பதிவிட வேண்டாம். ஏனென்றால் செம்பருத்திப்பூ டீ குடிப்பதால் மலட்டுத்தன்மை ஏற்படும். இதனால் குழந்தை பெற்றுக்கொள்ள கூடிய பாக்கியம் இழந்து விடுவார்கள். எனவே தவறான கருத்துக்களை பரப்ப வேண்டாம் என அவரை எச்சரித்து இருந்தார். இது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியது. உடனே நயன்தாரா அந்த பதிவை நீக்கினார்.

நயன்தாராவிற்கு ஆதரவாக விக்னேஷ் சிவன்

அந்த மருத்துவர் அவ்வாறு கூறியதும் மருத்துவா் Munmun Ganeriwal செம்பருத்திப்பூ டீ குடிப்பது ஆயுர்வேதத்தில் நன்மை பயக்கும். மேலும் அந்த மருத்துவர் வெறும் லிவர் மருத்துவர் தான். மேலும் அவர் கூறியிருப்பது வேறு வகையான செம்பருத்திப்பூ. நான் கூறியிருப்பது வேறு வகையான செம்பருத்திப்பூ. அவர் ஆயுர்வேதத்தையே குறை கூறி இருக்கிறார் என அந்த மருத்துவர் பதிவிட்டு இருந்தார்.

Vignesh Shivan Nayanthara

மேலும் நயன்தாரா அவர் போட்ட பதிவை நீக்கிவிட்டு முட்டாள்களுடன் வாதாடுவது நம்மையும் அவர்களின் தரத்திற்கு இழுத்துச் சென்று விடும். ஏனென்றால் அவர்கள் அவர்களுடைய அனுபவத்தால் நம்மை கேள்வி கேட்பார்கள் என கூறியிருந்தார்.

மேலும் இதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் டாக்டர் வேலு மணியுடன் உள்ள புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். அந்த புகைப்படத்தில் டாக்டர் வேலுமணி விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருந்தார்கள். மேலும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளதாவது, நாங்கள் ஒண்ணும் எம்பிஏ பட்டதாரி அல்ல. எனக்கும் நயன்தாராவுக்கும் தெரிந்தது சினிமா மட்டும் தான். நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு அதனை எங்கள் பிசினஸில் செய்து வருகிறோம். நாங்கள் பிசினஸில் செய்து வருவதற்கு டாக்டர் வேலுமணி போன்ற மனிதருடைய அறிவைச் சார்ந்து நாங்கள் தினந்தோறும் ஒன்றை கற்றுக்கொண்டு செய்து வருகிறோம்.

மேலும் நாங்கள் எங்களுடைய பிசினஸில் தெளிவாக இருக்க, டாக்டர் வேலுமணி எங்களுடனும், எங்கள் CEO-வுடனும் உறுதுணையாக இருந்து எங்களை வழி நடத்துகிறார் என அவர் குறிப்பிட்டு இருந்தார். இவரின் பதிவு அந்த மருத்துவரை மறைமுகமாக கூறியுள்ளதாக பலரும் பதிவுகளை கமெண்ட் செய்து வருகிறார்கள்.

மீண்டும் அந்த லிவர் மருத்துவர் Munmun Ganeriwal பதிவிட்டுள்ள பதிவிற்கு நான் வேறு ஏதாவது கூறினால், அவர் வேறு ஒரு செம்பருத்திப் பூவை பற்றி கூறுவார். அதனால் நான் எதுவும் கூற விரும்பவில்லை என அவர் கூறியிருந்தார்.

To Top