அஜித் படத்தோட போட்டி போட இதை பண்ணியாகணும்..! கதையையே மாற்றிய விஜய்..

நடிகர் விஜய் எப்போது கட்சி துவங்குகிறேன் என்று கூறினாரோ அப்போது முதலே அவரது திரைப்படங்களுக்கான வரவேற்புகள் என்பது அதிகரிக்க துவங்கி இருக்கிறது.

ஏனெனில் கட்சி துவங்கியதுடன் மட்டுமல்லாமல் 2026க்கு பிறகு சினிமாவை விட்டு விலகப் போவதாக அறிவித்திருக்கிறார் விஜய். எனவே இனி விஜய் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாமே அவரது ரசிகர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படங்களாக இருக்கின்றன.

அரசியல் பயணம்:

இந்த நிலையில் தற்சமயம் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் கோட். கோட் திரைப்படத்தை பொருத்தவரை இந்த திரைப்படம் ஒரு அறிவியல் புனைவு கதை என்று கூறப்படுகிறது.

thalapathy-vijay1
thalapathy-vijay1
Social Media Bar

இதனாலேயே இந்த படத்திற்கு வரவேற்பு அதிகமாக இருந்து வருகிறது மேலும் இந்த திரைப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா மாதிரியான முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர்.

விஜய்யும் இரட்டை கதாபாத்திரத்தில் இந்த திரைப்படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஒரு காலத்தில் விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கும் படங்கள் தோல்வியை கண்டாலும் கூட அதற்குப் பிறகு வந்த பிகில், மெர்சல் மாதிரியான திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தன.

கோட் திரைப்படம்:

அதனை தொடர்ந்து கோட் திரைப்படத்திலும் அவர் இரட்டை கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்சமயம் அந்த திரைப்படத்தில் விஜய் 3 கதாபாத்திரங்களில் நடிப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

vijay GOAT
vijay GOAT

ஏன் திடீரென்று இந்த மாற்றம் என பார்க்கும் பொழுது அஜித் தற்சமயம் நடிக்கும் திரைப்படத்தில் அவர் மூன்று கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது எனவே அவருக்கு போட்டியாகவே விஜய் தற்சமயம் திரைக்கதையை மாற்றி இருக்கலாம் என்று ஒரு பக்கம் கூறப்படுகிறது.

ஆனால் இன்னொரு பக்கம் அது ஆடியன்ஸ்காக சஸ்பென்ஸ் ஆக வைக்கப்பட்டிருக்கிறது என்றும் கூறப்படுகிறது. எப்படி இருந்தாலும் விஜய் மூன்று கதாபாத்திரத்தில் வரும் பட்சத்தில் இந்த திரைப்படம் அதிக வரவேற்பு பெரும் எதிர்பார்க்கப்படுகிறது.