Connect with us

இன்னொரு விஜயகாந்துதான் விஜய் ஆண்டனி!.. ஓப்பன் டாக் கொடுத்த தயாரிப்பாளர்..

News

இன்னொரு விஜயகாந்துதான் விஜய் ஆண்டனி!.. ஓப்பன் டாக் கொடுத்த தயாரிப்பாளர்..

Social Media Bar

தமிழ் சினிமாவில் நான் திரைப்படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் விஜய் ஆண்டனி. அதற்கு முன்பே இசையமைப்பாளராக நிறைய திரைப்படங்களில் வெற்றி பாடல்களை கொடுத்திருக்கிறார் விஜய் ஆண்டனி.

அவர் முதன்முதலாக இசையமைத்த டிஷ்யூம் திரைப்படத்திலேயே எக்கசக்க பாடல்கள் நல்ல வெற்றியை கொடுத்தன. அதேபோல அந்த சமயத்தில் வந்த சுக்கிரன் திரைப்படத்தின் பாடலுக்கும் நல்ல வெற்றி கிடைத்தது.

இசை வாழ்க்கை:

தொடர்ந்து நல்ல இசையமைப்பாளராக இருந்து வந்த விஜய் ஆண்டனி பிறகு நடிக்கும் பொழுது அதிலும் நல்ல வாய்ப்பை பெற்றார். தொடர்ந்து தற்சமயம் கதாநாயகனாக நடித்து வருகிறார். அவர் நடித்த திரைப்படங்களில் பிச்சைக்காரன் திமிரு புடிச்சவன் கோடியில் ஒருவன் திரைப்படங்கள் எல்லாம் முக்கியமான திரைப்படங்கள் என்று கூறலாம்.

இந்த நிலையில் அக்னி சிறகுகள் என்கிற பெரும் பட்ஜெட் திரைப்படத்தில் வெகு நாட்களாக நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. இந்த திரைப்படத்தில் இவருக்கு சமமான கதாபாத்திரத்தில் நடிகர் அருண் விஜய்யும் நடித்து வருகிறார்.

படப்பிடிப்பில் சிம்ப்ளிசிட்டி:

இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் படபிடிப்பு முடிந்த நிலையில் இன்னும் படம் திரைக்கு வராமல் இருக்கிறது. இந்த படம் குறித்து படத்தின் தயாரிப்பாளர் ஒரு பேட்டியில் பேசும்பொழுது விஜய் ஆண்டனியை பொருத்தவரை அவரை அடுத்த விஜயகாந்த் என்று தான் கூற வேண்டும்.

படப்பிடிப்பு நடக்கும் பொழுது எங்களுக்கு செலவு வைக்க கூடாது என்ற பல விஷயங்களை அவர் தவித்து வந்தார் முக்கியமாக அவருக்கு கேரவனே வேண்டாம் என்று கூறிவிட்டார். ஓய்வு நேரங்களில் பக்கத்தில் இருக்கும் பிளாட்பாரங்களிலோ அல்லது நாற்காலியை போட்டு அமர்ந்தோ கழித்து வந்தார் விஜய் ஆண்டனி.

விஜயகாந்துக்கு பிறகு இவ்வளவு சிம்பிளான ஒரு மனிதராக விஜய் ஆண்டனியை தான் பார்க்கிறேன் என்று அவர் கூறியிருந்தார்.

To Top