Tamil Cinema News
விஜய் ஆண்டனி விஷயத்தில் யூ ட்யூப் சேனல்கள் செய்வது சரி கிடையாது!.. கடுப்பான ரசிகர்கள்!..
உலகில் உள்ள ஒவ்வொரு மனிதருக்கும் தன்னுடைய உறவின் இழப்பு என்பது ஈடு செய்ய முடியாத வேதனையாக இருக்கும். அதிலும் பெற்ற பிள்ளைகளை இழப்பது என்பது எந்த ஒரு பெற்றோராலும் தாங்கி கொள்ளவே முடியாத விஷயமாகும்.
தற்சமயம் நடிகர் விஜய் ஆண்டனி அப்படியான ஒரு நிலையில்தான் இருக்கிறார். நேற்று அதிகாலை 3 மணியளவில் அவரது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். 12 ஆம் வகுப்பு படித்து வரும் அவர் என்ன காரணத்தால் தற்கொலை செய்துக்கொண்டார் என இன்னும் தெரியவில்லை.
இந்த நிலையில் யூ ட்யூப் சேனல்கள் பலவும் இதனால்தான் விஜய் ஆண்டனி மகள் இறந்தார் என பல காரணங்களை ஊகங்களாக கூறி வருகின்றனர். மேலும் அவர் பிள்ளையை ஒழுங்காக வளர்க்கவில்லை என்றும் சிலர் பேசி வருகின்றனர்.
விஜய் ஆண்டனி சோகத்தில் இருக்கும்போது அதை இன்னும் அதிகப்படுத்தும் வகையில் இப்படி வீடியோ போடுவது சரியா? ஏன் ஒருவர் இறப்பை கூட வியாபாரமாக்குகிறீர்கள் என நெட்டிசன்கள் இதுக்குறித்து அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
