News
சட்டப்படி தப்புதான் ஆனா பண்ணலாம்.. சர்ச்சையை கிளப்பிய விஜய் ஆண்டனி.!
ஒரு காலகட்டத்தில் பெரிதாக பத்திரிகை மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பேசாமல் இருந்து வந்த இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி இப்பொழுது அதிகமாக பேச துவங்கியிருக்கிறார்.
எந்த ஒரு படம் தொடர்பான விழாக்களில் கலந்து கொண்டாலும் அவர் கலகலப்பாக பேசுவதை பார்க்க முடியும். பத்திரிகையாளர்கள் தன்னை பற்றி என்ன எழுதுகிறார்கள் என்பது குறித்து விஜய் ஆண்டனிக்கு பெரிதாக கவலை இருப்பதாக தெரியவில்லை.
அரசியல் பேசிய விஜய் ஆண்டனி:
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய விஜய் ஆண்டனி ஓட்டுக்கு பணம் வாங்குவதற்கு ஆதரவாக பேசியிருப்பது சர்ச்சையாகி வருகிறது அந்த பேட்டியில் தொகுப்பாளரிடம் பேசிய விஜய் ஆண்டனி நீங்கள் ஒரு ஊரில் மொழி தெரியாத ஒரு ஊரில் போய் மாட்டிக் கொண்டுள்ளீர்கள்.
உங்களிடம் சுத்தமாக கையில் காசு இல்லை அப்பொழுது ஓட்டுக்காக பணம் கொடுக்கும் ஆட்கள் உங்களிடம் வந்து ஒரு ஆயிரம் ரூபாய் கொடுத்தால் வாங்காமல் இருப்பீர்களா? என்று கேட்டார்.
மேலும் அவர் கூறும் பொழுது கொடுக்கும் காசை வாங்கி வைத்துக் கொண்டு உங்களுக்கு யாருக்கு தோன்றுகிறதோ அவர்களுக்கே ஓட்டை போடுங்கள். நம்மிடம் இருந்து பிடுங்கப்பட்ட காசு தானே நமக்கு வருகிறது என்று கூறியிருந்தார் விஜய் ஆண்டனி.
