Connect with us

ஜோசியக்காரன் பேச்ச கேட்டு தவறான முடிவு எடுத்துட்டாங்களோ!.. விஜய் அரசியலுக்கு வந்ததன் பின்னணி இதுதான்!..

vijay

News

ஜோசியக்காரன் பேச்ச கேட்டு தவறான முடிவு எடுத்துட்டாங்களோ!.. விஜய் அரசியலுக்கு வந்ததன் பின்னணி இதுதான்!..

Social Media Bar

Actor Vijay: நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததுதான் கடந்த சில நாட்களாக தமிழ் சினிமாவிலும் சரி மக்கள் மத்தியில் சரி பெரும் பேசு பொருளாக இருந்து வருகிறது. அரசியல் தலைவர்களிடம் இது குறித்து கேட்கும் பொழுது அவர்கள் விஜய் அரசியல் கட்சியை துவங்கியது குறித்து ஆதரவு தான் தெரிவித்து வருகின்றனர்.

வெகு நாட்களாகவே விஜய் அரசியல் கட்சி துவங்குவது தொடர்பான யோசனைகளில்தான் இருந்து வந்தார். இதற்காக தனது திரைப்படங்களில் கூட அரசியல் சார்ந்த நிறைய கருத்துக்களை பேசி வந்தார். அதில் முக்கியமான திரைப்படம் சர்க்கார். இந்த திரைப்படத்தில் தொடர்ந்து அரசியலை சாடும் வகையில் பல விஷயங்களை பேசி இருந்தார் விஜய்.

Thalapathy-vijay
Thalapathy-vijay

அதேபோல கடந்த உள்ளாட்சி தேர்தலிலும் விஜய்யின் மக்கள் இயக்கம் சுயேட்சையாக ஒவ்வொரு வார்டிலும் போட்டியிட்டது. இந்த நிலையில் தற்சமயம் விஜய் அரசியல் கட்சியை தொடங்கியிருப்பது ஏற்கனவே எதிர்பார்த்த சம்பவமாக இருந்தாலும் கூட கட்சி ஆரம்பித்த பிறகு சினிமாவில் இனி நடிக்கப் போவதில்லை என்று விஜய் கூறி இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

விஜய் ரசிகர்களுக்குமே கூட அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனெனில் கட்சிக்கு வந்தவுடன் விஜய் சினிமாவை விட்டு செல்வார் என்று யாருமே நினைக்கவில்லை. இந்த நிலையில் இது குறித்து பத்திரிகையாளர்கள் பேசும் பொழுது ஒரு ஜோசியர் விஜய் அரசியலுக்கு வந்தால் சிறப்பாக இருக்கும் என்று கூறியதாலையே விஜய் அரசியலுக்கு வந்ததாக கூறுகின்றனர்.

மேலும் 2030களில் விஜய் முதலமைச்சராகவர் என்றும் அந்த ஜோசியர் கூறியதாக ஒரு தகவல் உள்ளது. மேலும் நிறைய ஜோசியக்காரர்கள் இதேபோல நிறைய நடிகர்களுக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். இந்த ஜோசியக்காரர்களின் பேச்சை எல்லாம் கேட்டுக் கொண்டு நடிகர்கள் அரசியலுக்கு வரலாம் என்று யோசித்து வருகின்றனர் ஆனால் இது தவறான ஒரு விஷயமாகும் என்று கூறி வருகின்றனர் சினிமா பத்திரிகையாளர்கள்.

To Top