தளபதி 67, ரஜினி போலவே செய்த விஜய் – அடுத்த ரஜினியாக ஆசையா?

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கும் செண்டி மெண்டல் விஷயங்கள் என சில விஷயங்கள் இருக்கும். அஜித் அதிகப்பட்சம் தனது திரைப்படங்களை வியாழக்கிழமைதான் வெளியிடுவார். 

அதே மாதிரி விஜய் எந்த ஒரு படம் நடிப்பதாக இருந்தாலும் அதற்கான பூஜையை ஏ.வி.எம் ஸ்டுடியோவில் உள்ள பிள்ளையார் கோவிலில்தான் போடுவார். வெகு காலமாக மிகவும் செண்டிமெண்டாக இதை ரஜினி செய்து வருகிறார்.

இந்நிலையில் வருகிற 5 ஆம் தேதி லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்திற்கான பூஜைகள் நடக்க இருக்கின்றன. இந்த பூஜையை ரஜினி எப்போதும் பூஜை நடத்தும் ஏ.வி.எம் பிள்ளையார் கோவிலிலேயே நடத்த சொல்லியிருக்கிறாராம் விஜய்.

இதற்கு முன்பு விஜய் பெரிதாக ஏ.வி.எம் ஸ்டிடுயோ பிள்ளையார் கோவிலில் பூஜை நடத்தியதில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜய் ஏன் திடீரென ரஜினியின் முறைகளை பின்பற்றுகிறார் என்கிற பேச்சுக்கள் திரைதுறையில் பெருகி வருகிறது.

Refresh